முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆஸ்திரேலியாவில் பிரித்வி ஷா சிறப்பாக விளையாடுவார் : சவுரவ் கங்குலி நம்பிக்கை

வெள்ளிக்கிழமை, 5 அக்டோபர் 2018      விளையாட்டு
Image Unavailable

Source: provided

மும்பை : வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக சதம் அடித்த ‘ப்ரித்வி ஷா’ ஆஸ்திரேலியா தொடரில் சிறப்பாக விளையாடுவார் என்று கங்குலி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

அறிமுக போட்டியில்...

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் தொடங்கியது. இளம் வீரரான பிரித்வி ஷா இந்த போட்டியில் அறிமுகமானார். முதல் போட்டியிலேயே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்து சதம் அடித்தார். இளம் வயதில் சதம் அடித்த 2-வது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். சச்சின் முதல் இடத்தில் உள்ளார்.

கங்குலி நம்பிக்கை...

முதல் இன்னிங்சிலேயே சதம் அடித்த பிரித்வி ஷா ஆஸ்திரேலியா தொடரில் சிறப்பாக விளையாடுவார் என்று சவுரவ் கங்குலி நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதுகுறித்து சவுரவ் கங்குலி கூறுகையில்

‘‘வெஸ்ட் இண்டீஸ் பந்து வீச்சாளர்களை துவம்சம் செய்து செஞ்சூரி அடித்தார். பெரிய போட்டி, முதல் ஆட்டம், அவருக்கு தெரிந்த விளையாட்டை எளிதாக ஆடினார். நேர்மறையான, சிறந்த மனநிலை, திறமையான ஆட்டம் மிகவும் அபாரம். 19 வயதிற்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பையிலும், இந்தியாவிற்கான போட்டியிலும் அவரது ஆட்டம் முற்றிலும் மாறுபட்டுள்ளது.

நீண்ட காலம்...

பிரித்வி ஷா ஆட்டம் மிகவும் அபாரமாக இருந்தது. அவர் இந்திய அணிக்காக நீண்ட காலம் விளையாட முடியும். இன்னும் ஒரு மாதத்தில் பிரித்வி ஷா ஆஸ்திரேலியா செல்ல வேண்டியுள்ளது. அவர் ஒரு சிறந்த பேக்-புட் வீரர் என்பதால் அங்கு சிறப்பாக விளையாடுவது உறுதி’’ என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து