முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரித்வி ஷாவிடம் திறமை, சரியான உத்தி உள்ளது : சச்சின் டெண்டுல்கர் புகழாரம்

வெள்ளிக்கிழமை, 5 அக்டோபர் 2018      விளையாட்டு
Image Unavailable

Source: provided

மும்பை : மே.இ.தீவுகளுக்கு எதிராக ராஜ்கோட்டில் அறிமுக போட்டியிலேயே சதம் கண்ட பிரித்வி ஷா கிரிக்கெட் பிரபலங்களின் கவனத்தை தன் பேக்ஃபுட் பஞ்ச்கள் மூலம் கவர்ந்துள்ளார்.

தனியார் ஆங்கில ஊடகம் ஒன்றில் சச்சின் பிரித்வி ஷா பற்றி கூறியதாவது:- முதன் முதலாக பிரித்வியைப் பார்த்த போது என் நண்பர் சவானிடம் கூறினேன் இவர் நிச்சயம் இந்திய கிரிக்கெட் வீரராக நீண்ட காலம் ஆடுவார் என்றேன், என் வார்த்தையைக் குறித்துக் கொள் நிச்சயம் இந்தியாவிற்கு ஆடுவார் என்றேன்.

பிரித்வி தன் முதல் ஆட்டத்திலேயே சதம் அடித்தது பெரிய ரிலீஃப் ஆக உள்ளது. உள்நாட்டு கிரிக்கெட்டில் நன்றாக ஆடிவிட்டார், அடுத்த கேள்வி அனைவருக்கும் ஏற்படுவது சர்வதேச கிரிக்கெட்டில் என்பதுதான், அதிலும் தற்போது முதல் டெஸ்ட்டிலேயே சதமடித்து சாதித்துள்ளார் பிரித்வி. ஒருவர் எவ்வளவு திறமைசாலியாக இருந்தாலும் இந்தக் கேள்வி இருந்து கொண்டுதான் இருக்கும். இந்தச் சதம் இந்தக் கேள்விக்கு சீல் வைத்து விட்டது. இவ்வாறு சச்சின் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து