முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கும் விவகாரம்: வரும் 8-ம் தேதி பிரதமர் மோடியுடன் முதல்வர் எடப்பாடி நேரில் சந்திப்பு

வெள்ளிக்கிழமை, 5 அக்டோபர் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை, மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய எந்த தடையும் இல்லை, தாமதமும் இல்லை என்றும்,  எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் வெகுவிரைவில் நாட்டப்படும் என்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் உறுதிபட தெரிவித்துள்ளார். மேலும், இதுதொடர்பான திட்டத்தை விரைபடுத்தகோரி வரும் 8-ம் தேதி பிரதமர் மோடியை நேரில் சந்தித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி வலியுத்தவுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் சென்னை தலைமை செயலகத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கடந்த 30ம் தேதி தகவல் உரிமைச்சட்டத்தின் அடிப்படையில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து ஒரு தகவல் அளிக்கப்பட்டது. அந்த தகவல் உரிமை சட்டத்தின் அடிப்படையில் வழங்கப்பட்ட தகவல் தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாக மத்திய சுகாதாரத்துறை இயக்குனர் சஞ்சய் ராயிடமிருந்து தமிழக அரசுக்க அதிகாரப்பூர்வ தகவல் கிடைத்திருக்கிறது. இந்த தகவலை கடந்த 4ம் தேதி அவர் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனுக்கு இ-மெயில் மூலம் அனுப்பப்பட்டுள்ளது.

மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் தொடங்கப்படுவதில் எந்த தாமதமும் இல்லை. தடையுமில்லை, அதற்கான விரிவான திட்ட அறிக்கை தயார் நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான நிர்வாக அதிகாரியும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். தோப்பூரில் 200 ஏக்கர் நிலப்பரப்பில் எய்ம்ஸ் மருத்துவமனை தொடங்கப்பட இருக்கிறது. அந்த குறிப்பிட்ட நிலம் தனியாருக்கு சொந்தமானது அல்ல. முழுக்க முழுக்க மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு சொந்தமானதாகும். அதில் எந்த பிரச்னையும் இல்லை. குறுக்கீடும் இல்லை. மேற்கண்ட இடத்தில் மணல் ஆய்வு நடத்தவும் சர்வே நடத்தவும் ரூ.15 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மதுரையில் எய்ம்ஸ் மரு்ததுவமனை கட்டுவதற்காக ரூ.1,264 கோடியை மத்திய நிதி அமைச்சகம் தற்காலிக அடிப்படையில் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இது குறித்து நிதித்துறையின் செலவினத்துறை விரைவில் அமைச்சகத்திற்கு அனுப்பவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது  இந்த திட்டத்தை விரைவுப்படுத்துவதற்காக வரும் 8-ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் மோடியை நேரில் சந்தித்து வலியுறுத்த இருக்கிறார். நானும் வரும் 9-ம் தேதி புதுடெல்லி சென்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டாவை சந்திக்க இருக்கிறேன். மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான அடிக்கல் வெகுவிரைவில் நாட்டப்படும் இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து