முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சச்சின் டெண்டுல்கர் - ஷேவாக் இருவரின் நுணுக்கங்களை கொண்டவர் பிரித்வி ஷா: பயிற்சியாளர் ரவிசாஸ்திரி புகழாரம்

வெள்ளிக்கிழமை, 5 அக்டோபர் 2018      விளையாட்டு
Image Unavailable

Source: provided

மும்பை : அறிமுக போட்டியில் பிரித்விஷா பயமின்றி ஆடி சதம் அடித்துள்ளதால் அவரது பேட்டிங்கில் டெண்டுல்கர், மற்றும் ஷேவாக் இருவரின் நுணுக்கங்கள் உள்ளன என்று ரவிசாஸ்திரி தெரிவித்துள்ளார்.

சதம் அடித்து அசத்தல்

மும்பையை சேர்ந்த பிரித்விஷா அறிமுக டெஸ்டிலேயே சதம் அடித்து அசத்தினார். குறைந்த வயதில் அறிமுக போட்டியில் சதம் அடித்து இந்திய வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார். பிரித்விஷா பயமின்றியும், பதற்றமின்றியும் அருமையாக விளையாடினார். அவரது ஆட்டத்தை டெண்டுல்கர் உள்ளிட்ட பலர் பாராட்டி உள்ளனர்.

இருவரின் நுணுக்கங்கள்

பிரித்விஷாவை இந்திய அணியின் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி பாராட்டி உள்ளார். அவர் கூறியதாவது:-

பிரித்வி ஷா அருமையாக விளையாடினார். அவர் அறிமுக போட்டியில் பயமின்றி ஆடி சதம் அடித்துள்ளார். அவரது பேட்டிங்கில் டெண்டுல்கர், மற்றும் ஷேவாக் இருவரின் நுணுக்கங்கள் உள்ளன என்றார்.

சர்வதேச போட்டியிலும்...

பிரித்விஷாவுக்கு இது தனி சிறப்பு வாய்ந்த நாளாக இருந்திருக்க வேண்டும். அறிமுக டெஸ்டில் சதம் அடித்துள்ளார். ரஞ்சி கோப்பை, துலிப் டிராபி ஆகியவற்றில் அறிமுக போட்டியிலேயே சதம் அடித்த அவர் சர்வதேச போட்டியிலும் சதம் அடித்து அசத்தி உள்ளார். ஆனால் அவரை ஷேவாக்குடன் ஒப்பிடக் கூடாது.

சுரேஷ் ரெய்னா...

பிரித்விஷாவை அவரது உலகத்தை பார்க்க விட வேண்டும். அவர் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து. தென் ஆப்பிரிக்க மண்ணிலும் ரன்கள் குவிப்பார் என்று நம்புகிறேன். ஆனாலும் அவர் ஷோவாக்குடன் ஒப்பிட கூடாது என்றார். சுரேஷ் ரெய்னா கூறும் போது, பிரித்விஷா கடினமாக உழைக்கும் வீரர். அவரது பேட்டிங் எனக்கு ஷேவாக்கை ஞாபகப்படுத்துகிறது. அவரது ஷாட்டுகள் உயர்தரமானது. அவருக்கு நல்ல எதிர்காலம் உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து