முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சமையலறை ஓவனில் இருந்து பாம்பு மீட்பு

சனிக்கிழமை, 6 அக்டோபர் 2018      உலகம்
Image Unavailable

லண்டன்,லண்டன் மான்செஸ்டர் நகரில் உள்ள ஸ்டாக்போர்ட் பகுதியில் ஒரு வயதான தம்பதி வசித்து வருகின்றனர். அந்த பாட்டி சமைப்பதற்காக ஓவனை திறந்த போது உள்ளே பழுப்பு நிற ஆப்பிரிக்கன் பாம்பு இருந்திருக்கிறது.

3 அடி நீளத்தில் சுருண்டு கிடந்த அந்த பாம்பு கண்டதும் பாட்டி படக்கென்று ஓவனை மூடிவிட்டார். அதனால் பழுப்பு நிறத்தில் நெளிந்து கிடப்பது பாம்புதான் என்று உறுதியாக தெரியாமல், தனது கணவரை அழைத்து வந்தார். இதையடுத்து அவரது கணவர் அது பாம்புதான் என்று சொன்ன பிறகுதான் பாட்டி நம்பினாராம்.

உடனடியாக அங்கிருக்கும் உயிரின வதைதடுப்பு பிரிவினருக்கு அவர்கள் தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்து பாம்பினை மீட்டனர். மேலும் அந்த பழுப்பு நிற பாம்பினை யாராவது வளர்ப்பதற்கு ஆர்வமாக இருக்கிறார்களா என்றும் விசாரித்து வருகிறார்கள். மீட்டு சென்ற பாம்பிற்கு சமி என்றும் ஒரு பெயரை வைத்திருக்கிறார்கள் அக்குழுவினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து