முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்காவின் மிரட்டலுக்கு பணிந்தது சவுதி அரேபியா

சனிக்கிழமை, 6 அக்டோபர் 2018      உலகம்
Image Unavailable

ரியாத்,அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்ற பிறகு ஈரானுடனான ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகியது. ஆனால் அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்த பிற நாடுகள் ஈரானுக்கு ஆதரவு தெரிவித்தன. ஈரான் மீது பொருளாதார தடைகளை அமெரிக்கா விதித்தது.

மேலும், அந்த நாட்டிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்க மற்ற நாடுகளுக்கு அமெரிக்கா தடை விதித்து வருகிறது. இதனால் ஈரானில் உற்பத்தியாகும் கச்சா எண்ணெயில் 40 சதவீதம் முடங்கியுள்ளது. இதன் காரணமாக, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருகிறது. கச்சா எண்ணெய் பற்றாக்குறை இழப்பை ஈடுகட்ட சவுதி அரேபியா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் கூடுதலாக கச்சா எண்ணெய் உற்பத்தி செய்ய வேண்டும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் வேண்டுகோள் விடுத்தார். ஆனால் இந்த வேண்டுகோளை சவுதி அரேபியா ஏற்றுக் கொள்ள மறுத்தது.

இதனால் அமெரிக்க அதிபர் டிரம்ப் கடும் கோபமடைந்தார். அமெரிக்கா இல்லாமல் இரண்டு வாரங்களுக்கு கூட சவுதி அரேபிய மன்னரால் பதவியில் நீடிக்க முடியாது என டிரம்ப் ஆவேசமாக கூறினார். இதனால் இருநாடுகள் இடையேயான உறவு சீர்கெடும் நிலை ஏற்பட்டது.இந்தநிலையில் அமெரிக்காவின் மிரட்டலுக்கு சவுதி அரேபியா பணிந்துள்ளது.

இதுகுறித்து சவுதி அரேபிய இளவரசர் முகமது பின் சல்மான் கூறியதாவது:-அமெரிக்க அதிபர் டிரம்புடன் இணைந்து பணியாற்றவே நாங்கள் மிகவும் விரும்புகிறோம். இருநாடுகளும் இணைந்து மத்திய கிழக்கில் பல சாதனைகளை புரிந்துள்ளன. தீவிரவாதம், ஐ.எஸ். நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளோம். நல்ல நண்பர்களிடையே சில நேரங்களில் மாற்று கருத்து எழுத்தான் செய்யும்.  ஆனால் தவறுகளை திருத்தி நட்பை தொடர்வதே சிறந்த நட்பாகும். குடும்பங்களில் கூட மாற்றுக் கருத்து எழத்தான் செய்யும். இதையும் அதுபோலத்தான் நாங்கள் எண்ணுகிறோம். ஈரான் கச்சா எண்ணெய் இல்லாததால் ஏற்படும் இழப்புகளை இனிமேல் சவுதி அரேபியா ஈடுகட்டும். அதற்கான பணிகளை உடனடியாக தொடங்குவோம் எனக்கூறினார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து