முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஷூவில் ஒட்டிக் கொண்ட டாய்லட் பேப்பரை கவனிக்காத டிரம்ப் நெட்டிசன்கள் கிண்டல்

சனிக்கிழமை, 6 அக்டோபர் 2018      உலகம்
Image Unavailable

நியூயார்க்,மினியாபோலிஸ் நகரில் உள்ள செயிண்ட் பால் சர்வதேச விமான நிலையத்துக்கு சென்று அங்கு அமெரிக்க அதிபர்கள் மட்டுமே விமானத்தில் பயணிக்க கூடிய ஏர்போர்ஸ் -1 விமானத்தில் ஏறுவதற்காக படிக்கட்டில் ஏறி செல்ல ஆரம்பித்தார் டிரம்ப். அப்போது அவரது இடது காலில் உள்ள ஷூவில் ஒரு டாய்லெட் பேட்டர் ஒட்டிக் கொண்டது.

அதை கவனிக்காமலே டிரம்ப் விமான படிக்கட்டில் சென்று கொண்டிருந்தார். அது மட்டும் இல்லாமல், படிக்கட்டில் நின்றவாறே கீழே நின்றவர்களை நோக்கி கை காட்டினார். இது விமான நிலையத்தில் இருந்த சிலரின் கண்களில் பட்டுவிட்டது. இதை வைத்துதான் நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகிறார்கள். விமானத்திற்குள் நுழைந்தவுடன் அந்த பேப்பர் கீழே விழுந்து விட்டது. ஆனால் பேப்பர் விழுந்தாலும் நெட்டிசன்கள் விடவில்லை. ஒரு அதிபர் டாய்லெட் பேப்பர் ஷூவில் இருப்பதை கூடவா கவனிக்க மாட்டார் என கேள்விகளுடன் கலாய்த்து வருகின்றனர் நெட்டிசன்கள்.  ஆனால் டிரம்பின் ஆதரவாளர்களோ அது சாதாரண பேப்பர்தான். டாய்லர் பேப்பர் இல்லை என்று பதிலுக்கு டுவிட் செய்து வருகிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து