முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சசிகலா குடும்பத்தை அ.தி.மு.க.வில் சேர்க்கும் பேச்சுக்கே இடமில்லை அமைச்சர் ஜெயகுமார் திட்டவட்டம்

சனிக்கிழமை, 6 அக்டோபர் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை,சசிகலா குடும்பத்தை அதிமுகவில் சேர்க்கும் பேச்சுக்கே இடமில்லை என்று அமைச்சர் ஜெயகுமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.வடசென்னையில் நேற்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்: அப்போது அவர் கூறியதாவது:-

நிச்சயம் நடவடிக்கை...எந்தவிதமான குற்றச்சாட்டும் இல்லாத ஒருவரைத் துணை வேந்தராக நியமிப்பது நல்ல செயல். ஆனால் அதே நேரத்தில் கவர்னர் குறிப்பிட்டதுபோல தவறு செய்தது வெளியே வந்தால் அரசு அவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும். கவர்னர் யாரையும் குறிப்பிட்டு சொல்லவில்லை. அவர் நியமனம் செய்ததை தெரிவித்துள்ளார். தவறு செய்தவர்களுக்கு நாங்கள் வக்காலத்து வாங்க மாட்டோம். தவறு செய்திருந்தால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும். கவர்னர் என்பவர் மாநிலத்தின் நிர்வாக தலைவர். அந்த அடிப்படையில் முதல்வர் அவ்வப்போது மாநிலத்தில் நடைபெற்றுவரும்
பணிகள், சூழ்நிலைகள் குறித்து தெரிவிப்பது வழக்கமான ஒன்றுதான்.

விளக்கம் போதுமானது....தற்போது மழை வெள்ள பாதிப்புகள் ஏற்படாத வகையில் அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து கவர்னரிடம் விளக்கம் அளித்துள்ளார். இதில் எந்த அரசியல் உள்நோக்கமும் இல்லை. டிடிவி தினகரனைத் துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் சந்தித்தார் என்ற தகவலை அளித்து அதன் அடிப்படையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் விளக்கம் அளித்துள்ளார். அந்த விளக்கமே போதுமானது.

ஏகோபித்த முடிவு...ஆனால் ஒன்று மட்டும் குறிப்பிட விரும்புகிறேன். ஏப்ரல் 16ம் தேதி இரவு எடுத்த முடிவு தொண்டர்களின் ஏகோபித்த முடிவு. சசிகலா குடும்பத்தை சார்ந்தவர்களின் யாருடைய தலையீடும் இல்லாமல் இயக்கத்தையும் அரசையும் வழிநடத்த வேண்டும். என்பதுதான் அனைவரின் உணர்வும் அந்த உணர்வுதான் நேற்றும் இன்றும் நாளையும் இருக்கும்.இதில் எந்த மாறுபட்ட கருத்தும் இல்லை. சசிகலாவோ, தினகரனே மீண்டும் அதிமுகவில் சேர்த்துக் கொள்ளும் வாய்ப்பு நிச்சயமாக
இல்லை. இதுதான் அதிமுக தொண்டனின் எதிர்பார்ப்பு. மக்களின் எதிர்பார்ப்பு. அந்த எதிர்பார்ப்பை நிச்சயம் நிறைவேற்றுவோம்.

ஜெயலலிதாவின் ஆசி...தற்போது இருக்கும் நிலையில் ஜெயலலிதாவின் லட்சியங்கள் மற்றும் கனவுகளை அரசு தொடர்ந்து நிறைவேற்றிவருகிறது. இதனை மக்கள் உணர்ந்து இடைத்தேர்தலில் எங்களுக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்வார்கள். யார் எந்த யுக்திகள் ,வஞ்சகங்கள் சூழ்ச்சிகளை பயன்படுத்தினாலும் கூட எங்களுக்கு ஜெயலலிதாவின் நல்லாசி உள்ளது. எனவே பெரும்பான்மை வாக்குகள் பெற்று வரலாற்றில் இடம் பெறுவோம்.

பாதிப்பு இல்லை...டி.டி.வி தினகரன் பக்கம் பெரிய அளவில் யாரும் கிடையாது. கிட்டதட்ட 2 சதவீதம் பேர் அங்கு உள்ளனர். இதில்கூட இங்குப் பதவிகிடைக்காதவர்கள்தான் அங்குச் சென்றுள்ளனர். இங்கு எல்லோருக்கும் பதவி தரமுடியாது. உழைப்பவரே உயர்ந்தவர் என்ற அடிப்படையில் அதிமுகவில் உழைத்தவர்களுக்குக் கண்டிப்பாக வாய்ப்பு வரும். இங்கிருந்து சென்றவர்களால் கட்சி எந்தவிதத்திலும் பாதிக்காது. அரசியல் என்பது பெரிய கடல். இதில் யார்வேண்டுமானலும் குதிக்கலாம். இதில் கரை சேருபவர்கள்தான் முக்கியம். நடிகர் விஜய் அரசியலுக்கு வரட்டும்.அது தவறு இல்லை. அவரின் போக்கிரி படத்தில் அவர் பேசிய நான் ஒருவாட்டி முடிவு செய்தால் பின்னர் என் பேச்சை நானே கேட்கமாட்டேன் என்ற வசனத்தை மட்டும் அவருக்கு நினைவுபடுத்துகிறேன். அவர் பேச்சு ஒரு கானல் நீர் போன்றது. இவ்வாறு தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து