முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தலைமை கழகத்தில் வரும் 11-ம் தேதி அ.தி.மு.க. உறுப்பினர் சீட்டு வழங்கும் விழா இ.பி.எஸ். - ஓ.பி.எஸ். தொடங்கி வைக்கின்றனர்

சனிக்கிழமை, 6 அக்டோபர் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை,அ.தி.மு.க. உறுப்பினர் உரிமைச்சீட்டு வழங்கும் விழா வரும் 11-ம் தேதி நடைபெறும் என்றும் இந்த விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் பங்கேற்று துவக்கி வைப்பார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வரும் வியாழக்கிழமை...இது குறித்து அ.தி.மு.க. தலைமைக்கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு வருமாறு:-
அ.தி.மு.க.வின் புதிய உறுப்பினர் உரிமைச் சீட்டுகள் வேண்டி, அதற்கான உறுப்பினர் சேர்ப்பு விண்ணப்பப் படிவங்களை கடந்த மார்ச் 1-ம் தேதி முதல் மே 31-ம் தேதி வரை தலைமைக் கழகத்தில் சேர்ப்பித்து ரசீது பெற்றுள்ளவர்களுக்கு, வரும் 8-ம் தேதி முதல் உறுப்பினர் உரிமைச் சீட்டுகள் வழங்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. தற்போது, கடும் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் முன்னறிவிப்பு வெளியிட்டிருக்கின்ற காரணத்தால், அந்த தேதிக்கு பதிலாக, வருகின்ற 11-ம் தேதி காலை 10.30 மணி முதல் தலைமைக் கழகத்தில் புதிய உறுப்பினர் உரிமைச் சீட்டுகள் வழங்கப்படும்.

இ.பி.எஸ். - ஓ.பி.எஸ்...இந்த நிகழ்ச்சியை, அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ. பன்னீர் செல்வம் இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடிபழனிசாமி துவக்கி வைக்க உள்ளனர். ஆகவே அ.தி.மு.க.வினர் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை மார்ச் 1-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை தலைமைக் கழகத்தில் சேர்ப்பித்து, அதற்கான ரசீதுகளைப் பெற்றுள்ளவர்கள் 11-ம் தேதி முதல் அதனைக் கொண்டுவந்து காண்பித்து, அந்தந்த ரசீதுகளுக்குரிய உறுப்பினர் உரிமைச் சீட்டுகளைப் பெற்றுக் கொள்ளலாம்.

தேதி பின்னர் அறிவிப்பு...மே 31-ம் தேதிக்குப் பிறகு உறுப்பினர் சேர்ப்பு விண்ணப்பப் படிவங்களை தலைமைக் கழகத்தில் சேர்ப்பித்து, ரசீது பெற்றுள்ளவர்களுக்கான உறுப்பினர் உரிமைச் சீட்டுகள் தேதி வாரியாக படிப்படியாக தயார் செய்யப்பட்டு, அவர்களுக்கான உறுப்பினர் உரிமைச் சீட்டுகள் வழங்கப்படும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து