ராமேசுவரத்தில் விடிய,விடிய கன மழை: திருக்கோவில் பிரகாரத்தில் மழைநீர் புகுந்தது.

ஞாயிற்றுக்கிழமை, 7 அக்டோபர் 2018      ராமநாதபுரம்
7 rms news

 ராமேசுவரம்,-  ராமேசுவரம் தீவு முழுவதும் நேற்று இரவு முழுவதும் தொடர்ந்து கனமழை பெய்ததால் சாலையில் ஓடிய மழைநீர் திருக்கோவில்  நுழைவு வாயில் வழியாக பிரகாரம் பகுதியில் நிரம்பியது.
  ராமேசுவரம்,தங்கச்சிமடம்,பாம்பன் ஆகிய பகுதிகளில் கடந்த  நான்கு நாட்களாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.இதனால் சாலைகள் மற்றும் வீடுகளில் சில மணி நேரங்கள் மழை நீர் தேங்கி பின்னர் பூமிக்கு உணர்ந்து விடுகிறது.இந்த நிலையில் நான்காவது நாளான சனிக்கிழமை இரவு 8 மணி முதல் அதிகாலை வரை கன மழை பெய்தது.இந்த மழையால் ராமநாதசுவாமி திருக்கோவில் கீழ ரத வீதி முன்பு சாலை வழியாக பல பகுதிகளில் இருந்து வந்த மழை நீர் திருக்கோவில் நுழைவு வாயில் வழியாக திருக்கோவில் நுழைவு பிரகாரம் பகுதியில் நிரம்பியது.இதையறிந்து திருக்கோவில் பணியாளர்கள் இரவு முடிந்த அளவிற்கு மழைநீரை வெளியேற்றினார்கள்.பின்னர் இரவு முழுவதும் பெய்த மழைநீரை அதிகாலையில் வெளியேற்றி கோவிலுக்குள் மழைநீர் இல்லாத அளவிற்கு அப்புறப்படுத்தினார்கள்.திருக்கோவிலுக்கு வருகை தந்த பக்தர்களுக்கு எந்த விதமான இடையூரும் ஏற்படவில்லை.ஆதலால் பக்தர்கள் வழக்கம்போல் சுவாமி தரிசனம் செய்ய சென்று வந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து