முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காட்டு யானையால் சேதமடையும் பயிர்கள்: விவசாயிகள் கவலை

ஞாயிற்றுக்கிழமை, 7 அக்டோபர் 2018      தேனி
Image Unavailable

போடி,- தேவாரம் பகுதியில் காட்டு யானை தொடர்ந்து விவசாய பயிர்களை சேதப்படுத்தி வருவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
     தேவாரம் பகுதியில் ஒற்றை காட்டு யானை 'மக்னா' சுற்றித் திரிந்து வருகிறது. மனிதர்களை கண்டால் துவம்சம் செய்து கொன்று விடும் குணத்துடன் அலையும் இந்த யானை இரவு நேரங்களில் தேவாரம் பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் புகுந்து விவசாய பயிர்களை சேதப்படுத்தியும், மோட்டார் அறைகளை சேதப்படுத்தியும் வந்தது.
     இந்த யானையை பிடிக்க பொள்ளாச்சி டாப்-சிலிப் பகுதியிலிருந்து இரண்டு கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டன.இதனையடுத்து மக்னா யானை அருகிலுள்ள கேரள வனப்பகுதிக்கு சென்றுவிட்டது. ஒரு மாதம் வரை இப்பகுதிக்கு வரவில்லை. இதனிடையே யானைகளின் இனப்பெருக்க காலம் என்பதால் அவற்றின் குணம் மாறும் எனக் கருதி கும்கி யானைகளை மீண்டும் பொள்ளாச்சிக்கு அனுப்பி வைத்தனர்.
     கும்கி யானைகள் சென்ற பின்னரும் மக்னா யானை வரவில்லை. இதனால் விவசாயிகள் நிம்மதியுடனிருந்தனர். இந்நிலையில் தற்போது கேரள எல்லை பகுதியில் கன மழை பெய்து வருவதால் அடர்ந்த வனப்பகுதியில் கொசுக்கள் தொல்லை, இரத்தம் உறியும் அட்டை பூச்சிகள் தொல்லை போன்றவற்றால் மீண்டும் மக்னா யானை தேவாரம் பகுதிக்குள் புகுந்துள்ளது.
     இரவு முழுவதும் தே.ரெங்கநாதபுரம், பிரம்புவெட்டி புலன் என பல்வேறு பகுதிகளில் தோட்டங்களில் புகுந்து தென்னை, மரவள்ளிக் கிழங்கு, காய்கறிகள் என பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. இதனால் விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். இரவு நேரங்களில் தோட்டத்திற்கு செல்ல முடியாமல் அவதிக்குள்ளாகியுள்ளனர். மலைத்தொடர் அடிவாரப் பகுதிகளில் பகல் நேரத்திலேயே விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.
     தொடர்ந்து விவசாய பயிர்களையும், மோட்டார் அறை, தங்கும் குடிசையையும் சேதப்படுத்தி வரும் காட்டு யானையிடமிருந்து தங்களை காக்க மாவட்ட நிர்வாகமும், வனத்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து