முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பேசிய இலங்கை முன்னாள் பெண் அமைச்சர் கைது

திங்கட்கிழமை, 8 அக்டோபர் 2018      உலகம்
Image Unavailable

கொழும்பு : விடுதலைப்புலிகள் திரும்பி வர வேண்டும் என்று ஆவேசமாகப் பேசிய இலங்கையின் முன்னாள் பெண் அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் நேற்று போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

இலங்கை அரசில் ஆளும் ஐக்கிய தேசிய கட்சியைச் சேர்ந்தவர் விஜயகலா மகேஸ்வரன்(45). இவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே அமைச்சரவையில் குழந்தைகள் நல விவகாரத் துறை அமைச்சராக இருந்தார். கடந்த ஜூன் மாதம் யாழ்ப்பாணத்தில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், கடந்த 2009-ம் ஆண்டு மே 18-ம் தேதிக்கு முன்பாக நாம் எப்படி வாழ்ந்தோம் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டியது இருக்கிறது. இப்போது பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் பாதுகாப்பு இல்லை. இன்றைய சூழலில், வடக்கு மாநிலத்தில் மீண்டும் விடுதலைப்புலிகள் வர வேண்டும் என்பதேயே பெரும்பாலான மக்களின் விருப்பமாக இருக்கிறது.

நாம் வாழ விரும்பினால், சுதந்திரமாக நடமாட வேண்டும். நம்முடைய குழந்தைகள் சுதந்திராக பள்ளிக்குச் சென்று, உயிருடன் மீண்டும் வீட்டுக்கு திரும்ப வேண்டும். ஆனால், வடக்கு மாகாணத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டது என்று தெரிவித்திருந்தார்.

அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் பேசிய விவகாரம் இலங்கை நாடாளுமன்றத்தில் எதிரொலித்தது. இது குறித்து எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி அவர் மீது விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தின. இதையடுத்து, விஜயகலா மீது விசாரணை நடத்த ஒரு நபர் விசாரணைக்குழு அமைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டது. மேலும், விஜயகலா மகேஸ்வரனும தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.

விசாரணைக் குழு அளித்த அறிக்கையையடுத்து விஜயகலா மகேஸ்வரனுக்கு போலீசார் சம்மன் அனுப்பி விசாரணைக்கு ஆஜராகக் கூறினார்கள். நேற்று காலை விஜயகலா மகேஸ்வரனிடம் விசாரணை நடத்திய பின் போலீஸார் அவரைக் கைது செய்தனர். இதை போலீஸ் செய்தித்தொடர்பாளர் எஸ்.பி. ருவான் குணசேகராவும் உறுதி செய்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து