கலிபோர்னியாவில் ருசிகரம் மனைவியை கணவர் தூக்கி கொண்டு ஓடும் போட்டி

திங்கட்கிழமை, 8 அக்டோபர் 2018      உலகம்
california running competition 2018 10 8

கலிபோர்னியா : கணவன், மனைவியை சுமந்து செல்லும் நூதன போட்டி அமெரிக்காவில் நடந்தது. இதில் ஏராளமான தம்பதிகள் உற்சாகத்துடன் பங்கேற்றனர்.

கலிபோர்னியாவில் மைனே என்ற இடத்தில் மனைவியை கணவர் தூக்கி சுமக்கும் போட்டி நடந்தது. 834 அடி தூரத்திற்கு மனைவியை தூக்கி சுமந்து வர வேண்டும் என்ற விதி நிர்ணயிக்கப்பட்டது. 834 அடி தூரம் சுமந்து முதலில் வரும் கணவரே வெற்றியாளர். அதன்படி போட்டி துவங்கியது. மொத்தம் அதில் 30 ஜோடி கணவன் - மனைவி பங்கேற்றனர். ஜெசிவால் -கிறிஸ்டின் ஆர் செனால்ட் ஜோடி வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது.

வெற்றி பெற்ற கணவனுக்கு பீர் பரிசாக வழங்கப்பட்டது. மனைவி ஜெசிவா என்ன எடையோ, அதுக்கு நிகரான பீர் வழங்கப்பட்டது. அதுமட்டும் அல்ல, ஜெசிவா எடையை போன்று 5 மடங்கு தொகை பணமும் பரிசாக வழங்கப்பட்டது. இதில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால், இந்த தம்பதிக்கு இது இரண்டாவது வெற்றியாகும். ஏற்கனவே கலந்துகொண்டு பரிசை பெற்ற நிலையில் இது மற்றொன்று. அதே குஷியோடு, பின்லாந்தில் நடைபெற உள்ள உலக சாம்பியன் ஷிப் போட்டியிலும் பங்கேற்க போகிறார்களாம் இந்த தம்பதி!

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து