முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆசிய பாரா விளையாட்டு போட்டி: ஒரே நாளில் இந்தியாவுக்கு ஈட்டி, நீச்சல், ஓட்டத்தில் 3 தங்கப்பதக்கம்

திங்கட்கிழமை, 8 அக்டோபர் 2018      விளையாட்டு
Image Unavailable

ஜகர்த்தா : இந்தோனேசியாவில் நடந்து வரும் ஆசிய பாரா விளையாட்டு போட்டிகளில் இந்தியாவின் ஈட்டி எறிதல் வீரர் தங்க பதக்கம் வென்றுள்ளார். மேலும் 2 பிரிவில் தங்கம் வென்றதன் மூலம் ஒரேநாளில் நேற்று, இந்தியா 3 தங்கப்பதக்கங்களை வென்றது.

60.01 மீட்டர் தூரம்

இந்தோனேசியாவின் ஜகர்த்தா நகரில் ஆசிய பாரா விளையாட்டு போட்டிகள் நடந்து வருகின்றன.  மாற்று திறனாளிகள் கலந்து கொள்ளும் இதில் இன்று நடந்த ஈட்டி எறிதல் போட்டி ஒன்றில் இந்திய வீரர் சந்தீப் சவுத்ரி 60.01 மீட்டர் தூரத்திற்கு ஈட்டி எறிந்து முதல் இடம் பிடித்து தங்க பதக்கம் வென்றுள்ளார். அவருக்கு அடுத்த இடத்தில் இலங்கையின் சமிந்தா சம்பத் ஹெட்டி 59.32 மீட்டர் தொலைவுக்கு ஈட்டி எறிந்து 2வது இடம் பிடித்து வெள்ளி பதக்கம் வென்றார்.  ஈரான் நாட்டின் ஒமிடி அலி 58.97 மீட்டர் தூரத்திற்கு ஈட்டி எறிந்து 3வது இடம் பிடித்து வெண்கலம் வென்றுள்ளார்.

இந்த விளையாட்டு போட்டிகளில் இந்தியா 2 வெள்ளி மற்றும் 3 வெண்கல பதக்கங்களை வென்றது.  இந்த நிலையில் முதன்முறையாக நேற்று 3 தங்க பதக்கங்கங்களை தங்க பதக்க கணக்கினை தொடங்கியுள்ளது.

8 பதக்கங்களுடன்..

இதோபோல் ஆடவர் பட்டர்ஃபிளை 50மீ பிரிவில் இந்தியாவின் ஜாதவ் சுயாஷ் நாராயண் தங்கப்பதக்கம் வென்றார்.  1500மீ ஓட்டத்தில் இந்திய வீராங்கனை ரஜூ ரக்ஷிதா தங்கப்பதக்கம் வென்றார். இதுமட்டுமின்றி நேற்று ஒரே நாளில் இந்தியா 4 வெள்ளி மற்றும் 3 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளது.  நேற்று நிலவரப்படி 3 தங்கம், 6 வெள்ளி மற்றும் 7 வெண்கலப் பதக்கம் என 16 பதக்கங்களுடன் இந்தியா பதக்கப் பட்டியலில் 8-வது இடத்தில் உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து