முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திண்டுக்கல்லில் இடி விழுந்ததில் தீப்பிடித்து எரிந்த தென்னை மரம்

திங்கட்கிழமை, 8 அக்டோபர் 2018      திண்டுக்கல்
Image Unavailable

திண்டுக்கல், - திண்டுக்கல்லில் இடி விழுந்ததில் தென்னை மரம் தீப்பிடித்து எரிந்தது.
திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக கொடைக்கானல், பழனி, நிலக்கோட்டை, நத்தம், வேடசந்தூர், வத்தலக்குண்டு உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. திண்டுக்கல் நகரைப் பொறுத்தவரையில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இதனால் நகரில் நிலத்தடி ஞிர் மட்டம் உயர்ந்து வருவதை மக்கள் கண்கூடாக கண்டு வருகின்றனர். ஞாயிற்றுக்கிழமை லேசான மழை பெய்து ஓய்ந்த நிலையில் நேற்று பகல் முழுவதும் நல்ல வெயில் அடித்தது. மாலையில் கருமேகங்கள் சூழ்ந்து பலத்த இடிமின்னல் அடித்தது. அப்போது திண்டுக்கல் பஸ் நிலையம் அருகிலுள்ள டட்லி பள்ளியில் இருந்த தென்னை மரத்தின் மீது விழுந்தது. சிறிது நேரத்தில் அந்த மரம் தீப்பிடித்து எரிந்தது.
இதைப் பார்த்ததும் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து மின்சாரத்தை துண்டித்து பின்னர் தீயை அணைத்தனர். மாலை நேரம் பள்ளி முடிந்து மாணவர்கள் அனைவரும் சென்று விட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.  தீ முற்றிலும் அணைக்கப்பட்ட பின் அப்பகுதி மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். பின்னர் இடைவிடாது மழை பெய்தபடி இருந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து