முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தகவல் அறியும் உரிமைச்சட்டம் கலைநிகழச்சி கலெக்டர் கொ.வீர ராகவ ராவ் துவக்கி வைத்தார்

திங்கட்கிழமை, 8 அக்டோபர் 2018      ராமநாதபுரம்
Image Unavailable

ராமநாதபுரம்,- ராமநாதபுரத்தில் தகவல் அறியும் உரிமைச்சட்டம் குறித்த விழிப்புணர்வு கலைநிகழ்ச்சியை கலெக்டர் வீரராகவராவ் தொடங்கி வைத்தார்.
 அரசு நிர்வாகத்தின் வெளிப்படைத்தன்மையினை ஏற்படுத்தி ஊழலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் -2005 கடந்த 15.06.2005 அன்று இயற்றப்பட்டு, 12.10.2005 அன்று முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.  இச்சட்டத்தின் மூலம் ஒவ்வொரு இந்திய குடிமகனும் எந்தவொரு அரசு நிர்வாகம் குறித்த தகவல்களை எளிதில் பெறும் வகையில் அரசு அலுவலகங்களில் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடு, அறிக்கை, சுற்றறிக்கை, ஆவணம் என எவ்விதமான தகவல்களாக இருப்பினும் அதனை உரிய மனு செய்து சம்பந்தப்பட்ட பொது தகவல் அலுவலரிடம் பெறலாம். குறிப்பாக தகவல் பெற விரும்புபவர்கள் தங்களுக்கு வேண்டிய தகவல்களை குறிப்பிட்ட துறை சார்ந்த அலுவலகத்தின் பொது தகவல் அலுவலருக்கு,  மனுவுடன் ரூ.10 கட்டணம் செலுத்தி மனுவிலேயே கோர்ட் வில்லை ஒட்டி நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பி வைக்கலாம்.  வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை.  ஆனால் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர் என்பதற்கான சான்றிதழ் இணைத்து அனுப்ப வேண்டும்.
 தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கோரப்படும் தகவல்களை சம்பந்தப்பட்ட பொது தகவல் அலுவலர் மனு கிடைக்கப்பெற்ற நாளிலிருந்து 30 நாட்களுக்குள் உரிய முறையில் வழங்கிட வேண்டும்.  அதேபோல முறையான தகவல் கிடைக்கப் பெறாத பட்சத்தில் மனுதாரர் முதற்கட்டமாக மேல்முறையீட்டு அலுவலரிடத்திலும், அதற்கடுத்த கட்டமாக தகவல் ஆணையத்திலும் மேல்முறையீடு செய்யலாம்.  இச்சட்டத்தின் கீழ் நியாயமான காரணமின்றி தகவல் தர மறுக்கப்படும் பட்சத்தில், தமிழ்நாடு தகவல் ஆணையம் சம்பந்தப்பட்ட பொது தகவல் அலுவலருக்கு  காலதாமதம் ஏற்பட்ட ஒரு நாளுக்கு ரூ.250- வீதம் ரூ.25ஆயிரம்  வரையில் அபராதம் விதித்திட வழிவகை செய்யப்பட்டுள்ளது. 
 அதேவேளையில் தேசத்தின் இறையாண்மை, நாட்டின் பாதுகாப்பு ஆகியவற்றை பாதிக்கக்கூடிய தகவல்கள், நீதிமன்றத்தால் வெளியிட தடை செய்யப்பட்ட தகவல்கள், அயல்நாட்டு அரசிடமிருந்து பெறப்பட்ட மந்தண (ரகசிய ) தகவல்கள், குறிப்பிட்ட எவரின் உயிருக்கேனும் உடல் பாதுகாப்பிற்கேனும் பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய தகவல்கள், புலனாய்வு குற்றவாளிகளை கைது செய்தல் மற்றும் நீதிமன்ற வழக்கு தொடுப்பு ஆகியவற்றிற்கு இடையூறு செய்யக்கூடிய தகவல்கள், அமைச்சரவை ஆவணங்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற சிறப்பு உரிமையை மீறும் வகையிலான தகவல்கள் போன்ற சில தகவல்களை கோருவதற்கு இச்சட்டத்தின் கீழ் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இச்சட்டம் குறித்த கூடுதல் விவரங்களை றறற.வளெiஉ.பழஎ.in என்ற இணையதள முகவரியில் சென்று அறிந்து கொள்ளலாம். அதன்படி, தகவல் அறியும் உரிமைச்சட்டம் 2005 குறித்து பொதுமக்களுக்கு அதிகளவில் விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் தமிழ்நாடு தகவல் ஆணையம் அக்டோபர் 5 முதல் 12-ம் தேதி வரை தகவல் பெறும் உரிமைச்சட்ட வார விழாவாக கடைப்பிடித்து, நலிவுற்ற நாட்டுப்புற கலைஞர்களை கொண்டு மாவட்டங்கள் வாரியாக ஒரு நாள் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சிகள் நடத்திட அறிவுறுத்தியுள்ளது.  அதனடிப்படையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமநாதபுரம் புதிய பேருந்து நிலைய வளாகத்தில் மாவட்ட கலெக்;டர் கொ.வீர ராகவ ராவ் இவ்விழிப்புணர்வு கலைநிகழ்ச்சியினை துவக்கி வைத்து பார்வையிட்டதோடு தகவல் அறியும் உரிமைச்சட்டம் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினார். இவ்விழிப்புணர்வு கலைநிகழ்ச்சியானது நகரப்பகுதியில் பொதுமக்கள் அதிகளவில் கூடும் இடங்களான ராமநாதபுரம் புதிய பேருந்து நிலைய வளாகம், அரண்மனை சாலை, கேணிக்கரை சாலை, பாரதிநகர் என நான்கு இடங்களில் நடத்தப்படுகிறது.
 இந்நிகழ்ச்சியில் ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் டாக்டர்.ஆர்.சுமன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் கோ.அண்ணாதுரை உள்பட அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து