முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வாய்க்கால்களில் ஏற்படும் அடைப்புக்களை உடனடியாக அகற்ற வேண்டும் ஆணையாளர் அனீஷ் சேகர், உத்தரவு.

திங்கட்கிழமை, 8 அக்டோபர் 2018      மதுரை
Image Unavailable

மதுரை-  மதுரை மாநகராட்சி பகுதிகளில் நேற்று இரவு பெய்த கனமழையினால் மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளில் ஆணையாளர் மரு.அனீஷ் சேகர்.  ஆய்வு மேற்கொண்டு வாய்க்காலில் ஏற்பட்டுள்ள அடைப்புக்களையும், தேங்கியுள்ள மழைநீரினையும் அப்புறப்படுத்த உத்தரவிட்டார்.
 மதுரை மாநகராட்சி பகுதிகளில் நேற்று இரவு பெய்த கனமழையினால் பெரியார் பேருந்து நிலையம், இரயில்வே நிலையம், மேலவெளிவீதி ஆகிய பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரினை உடனடியாக அகற்றுமாறு உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து மண்டலம் எண்.2 பீ.பீ.குளம் வாய்க்காலில் மழைநீரால் அடித்து வரப்பட்ட குப்பைகளை உடனடியாக அகற்றுமாறும், ஆத்திகுளம் கண்மாய் நிறைந்து ஓடைகளில் செல்வதை பார்வையிட்டு, ஓடைகளில் அள்ளப்பட்டு குவிக்கப்பட்டுள்ள குப்பைகளை உடனடியாக அப்புறப்படுத்துமாறும், ஓடையில் ஏற்பட்டுள்ள உடைப்பினை பார்வையிட்டு பொதுப்பணித்துறையிரை தொடர்பு கொண்டு உடனடியாக சரிசெய்யுமாறு கூறினார்.
மேலும் ஊமச்சிக்குளம் மெயின் ரோடு பொறியாளர் நகரில் உள்ள சிறுதூர் கண்மாய் நிரம்பியுள்ளதை பார்வையிட்டு கண்மாயின் வெளிப்பகுதியில் உள்ள குடியிருப்புக்களில் தேங்கியுள்ள மழைநீரினை மின்மோட்டார் மூலம் அப்புறப்படுத்துமாறு உத்தர விட்டார். அழகர்கோவில் சாலையில் உள்ள மருதங்குளம் கண்மாய் நிறைந்து ஓடையில் செல்லும் மழைநீரினை பார்வையிட்டு மழைநீரில் அடித்து வரப்பெற்ற இறந்து கிடந்த மாட்டினை அப்புறப்படுத்துமாறு கூறினார். மேலும் புதூர் ராமவர்மா நகரில் உள்ள கோசாகுளம் வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டு குப்பைகள் அகற்றும் பணியினை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களுடன் ஆணையாளர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டு அடைப்பினை விரைவில் சரிசெய்யுமாறும், வாய்க்காலின் ஓரத்தில் ஆக்கிரமிப்புகள் இருந்தால் அகற்றுமாறும் உத்தரவிட்டார். புதூர் தொழிற்பேட்டையில் பகுதியில் செல்லும் போது தனியார் நிறுவனத்திலிருந்து குப்பையை சாலையில் கொட்டியவருக்கு உடனடியாக ரூ.2000 அபராதம் விதிக்க உத்தரவிட்டார். வாய்க்கால்களில் இருந்து அள்ளும் குப்பைகளை உடனுக்குடன் அப்புறப்படுத்துமாறு கூறினார். புதூர் கற்பக நகர் பகுதியில் உள்ள மாநகராட்சி கழிவுநீரேற்று நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டு மழைகாலம் என்பதால்  கழிவுநீரேற்று நிலையங்களில் உள்ள மின்மோட்டார்களை சரியான நேரங்களில் இயக்குமாறு சம்பந்தப்பட்ட அலுவலருக்கு உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின் போது செயற்பொறியாளர்  .ராஜேந்திரன்,   உட்பட மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து