முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பயனாளர்களின் கணக்கு விபரங்கள் திருட்டு: சர்ச்சைக்குள்ளான கூகுள் பிளஸ் நிறுவனம் மூடப்படுகிறது

செவ்வாய்க்கிழமை, 9 அக்டோபர் 2018      உலகம்
Image Unavailable

வாஷிங்டன்,பயனாளர்களின் தனிப்பட்ட கணக்கு விவரங்கள் திருடப்பட்டதாக எழுந்த சர்ச்சையை அடுத்து பிரபல சமூகவலைதளங்களில் ஒன்றான கூகுள் பிளஸ்-சை மூடப் போவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

சமூக ஊடக நிறுவனங்களில் முதன்மை வகிக்கும் நிறுவனமான கூகுள் நிறுவனத்தின் ஒரு அங்கமான கூகுள் பிளஸ் சேவை கடந்த 2011 -ம் ஆண்டு, ஜூன் மாதம் தொடங்கப்பட்டது. கூகுள் பிளஸ் பயனாளர்களின் கணக்குகளை பராமரிப்பதில் பாதுகாப்பு குறைபாடு உள்ளதாகவும், அதனை சரியான முறையில் கண்டறிந்து தீர்வை தேடுவதற்கு அந்நிறுவனம் தவறி விட்டதாகவும் வால்ஸ்ட்ரீட் ஜேர்னல் என்ற அமெரிக்க செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டிருந்தது.

இந்த தகவல் சமூக ஊடகங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பரபரப்பு அடங்குவதற்குள் கூகுள் பிளஸ் என்ற சமூக வலையமைப்பு தளத்தை மூடப்போவதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் போதுமான பயனாளர்களை ஈர்க்க தவறி விட்டதாலும், தொழில்நுட்பக் கோளாறு மற்றும் விரிவான சேவையை வழங்க முடியாத சூழல் இருந்து வருவதால் கூகுள் பிளஸ் சேவை மூடப்படுவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து