முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குஜராத்தில் வெளிமாநில தொழிலாளர் தாக்குதலுக்கு ராகுல் காந்தி கண்டனம்

செவ்வாய்க்கிழமை, 9 அக்டோபர் 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி,இளைஞர்களிடையே நிலவும் வேலையின்மை விரக்தியால்தான் ஆத்திரமடைந்து, குஜராத்தில் வெளிமாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இது வேதனைக்குரியது, தடுக்கப்பட வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.

குஜராத் மாநிலம் அகமதாபாத் ஹிம்மத்நகர் அருகே உள்ள கிராமத்தில் 14 மாத குழந்தையை ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்து விட்டார். இந்தப் பலாத்காரத்தில் ஈடுபட்டது பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ரவிந்திர சாஹு என்று கண்டுபிடிக்கப்பட்டு அவரைப் போலீசார் கைது செய்தனர்.ஆனால், குஜராத் மாநில மக்கள் வெளிமாநில தொழிலாளர்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியதையடுத்து பல தொழிலாளர்கள் குஜராத்தில் வெளியேறும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். இது தொடர்பாக  450 பேர் கைது செய்யப்பட்டனர்.இந்தச்சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது பேஸ்புக் பக்கத்தில் கருத்துப் பதிவிட்டுள்ளார்.

அவர் கூறியிருப்பதாவது:-குஜராத் மாநிலம் முழுவதும் மோசமான பொருளாதார கொள்கைகளால் நிர்வகிக்கப்படுகிறது. பணமதிப்பு நீக்க நடவடிக்கையும், சரக்கு மற்றும் சேவை வரியும் குஜராத் மாநிலத்தில் உள்ள தொழில்துறையை கடுமையாக பாதித்து விட்டன. இதன் காரணமாக மாநிலம் முழுவதும் இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய வேலையின்மை நிலவுகிறது.
வேலைவாய்ப்பை உருவாக்க முடியாத அரசால் இளைஞர்களிடையே விரக்தியும், கோபமும் அதிகரித்துள்ளது. இந்தக் கோபமும், விரக்தியும் சேர்ந்துதான் குஜராத் மாநிலம் முழுவதும் இருக்கும் புலம்பெயர் தொழிலாளர்கள் மீது தாக்குதலாக மாறியுள்ளது.
நம்முடைய பொருளாதார வளர்ச்சியில் புலம்பெயர் தொழிலாளர்கள், அல்லது வெளிமாநிலத் தொழிலாளர்கள் நிலை கவலைக்கிடமாக இருக்கிறது. அவர்மீதான தாக்குதல் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். இதுபோன்ற தாக்குதல்கள் அச்சமான சூழலை ஏற்படுத்தி, பாதுகாப்பின்மையை உண்டாக்கும். இது நம்முடைய நாட்டின் வர்த்தக சூழலுக்கும், பொருளாதாரத்துக்கும் நல்லதல்ல.அனைத்து இந்தியர்களும் எந்த மாநிலத்திலும் சென்று வேலை செய்ய உரிமை உண்டு. அவர்களுக்குப் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது மத்திய, மாநில அரசுகளின் கடமை. இவ்வாறு ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து