இந்திய ரூபாய் மதிப்பு மேலும் சரிவு

செவ்வாய்க்கிழமை, 9 அக்டோபர் 2018      இந்தியா
indian rupee with us dollar 04-10-2018

புது டெல்லி,அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு நேற்று காலை மேலும் சரிவை சந்தித்துள்ளது.இந்திய ரூபாய் மதிப்பு தினமும் சரிந்து கொண்டே வருகிறது. இதற்கு நிறைய காரணங்கள் சொல்லப்படுகிறது. பலவிதமான நடவடிக்கை எடுத்தும் கூட இந்திய ரூபாய் மதிப்பில் எந்த விதமான மாற்றமும் ஏற்படவில்லை. மத்திய அரசின் மோசமான பொருளாதார கொள்கைகள்தான் இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. அதே போல் ரிசர்வ் வங்கி இயக்குனர்கள் குழுவும் இதில் விரைந்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் தகவல்கள் வருகிறது. தொடர்ந்து இந்த சரிவு நீடிக்கும் என்று தகவல்கள் வருகிறது.

கடந்த சில நாட்களாக கொஞ்சம் சீராக இருந்த ரூபாய் மதிப்பு நேற்று மீண்டும் பெரிய சரிவை சந்தித்துள்ளது. கடந்த வாரம் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்தியா ரூபாய் மதிப்பு 74 ஐ தாண்டியது. இந்தியா ரூபாய் மதிப்பு 74.23 ஐ தொட்டுள்ளது. இந்திய வரலாற்றில் இல்லாத வீழ்ச்சியாகும் இது. இது தொடரும் என்று பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்து இருந்தனர். அதன்படி அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு மாபெரும் சரிவு ஏற்பட்டுள்ளது. டாலருக்கு நிகரான தற்போதைய ரூபாய் மதிப்பு 74.06 ஆகும். தொடர்ந்து ரூபாய் மதிப்பு சரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI

இழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI

FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது எப்படி | How to file FIR | Indian Law | Thinaboomi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து