ராமர் கோயில் கட்டுவதற்கு அவசர சட்டத்தை பிறப்பிக்க முடியாதது ஏன்? பா.ஜ.க.வுக்கு சிவசேனா கேள்வி

செவ்வாய்க்கிழமை, 9 அக்டோபர் 2018      இந்தியா
Shiv Sena 09-10-2018

மும்பை,ராமர் கோயில் கட்டுவதற்கும், பொது சிவில் சட்டம் கொண்டு வருவதற்கும் ஏன் அவசர சட்டத்தை பா.ஜ.க அரசால் பிறப்பிக்க முடியவில்லை என்று சிவசேனா கேள்வி எழுப்பி உள்ளது.

கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலின் போது அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படும் என்று பா.ஜ.க. வாக்குறுதி அளித்திருந்தது அதை இன்னும் பா.ஜ.க. நிறைவேற்றவில்லை. இது குறித்து சிவசேனா கட்சி தனது அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவில் எழுதியுள்ள தலையங்கத்தில் கூறியிருப்பதாவது,
பாஜகவுக்கு நல்ல காலம் உருவாக, ஆட்சியில் அமர முக்கியக் காரணமாக இருந்தவர் கடவுள் ராமர். ஆனால், உத்தரப்பிரதேசம், அயோத்தியில் ராமருக்குக் கோயில் கட்டப்படும் என்று பா.ஜ.க. உறுதியளித்து விட்டு இன்னும் அதை நிறைவேற்றாமல் இருக்கிறது.

ராமர் கோயில் கட்டாவிட்டால், அடுத்த தேர்தலில் ஆட்சியில் இருந்து பா.ஜ.க. அகற்றப்படும். நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இருந்த போதிலும் கூட அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் விவகாரத்தில் தொடர்ந்து பா.ஜ.க தாமதம் செய்து வருகிறது. ராமரும் பா.ஜ.க.வுக்கு நல்ல காலத்தைக் காட்டி ஆட்சியில் அமர வைத்தார். இப்போது, கடவுள் ராமரே வெளியேற்றப்படும் நிலையில் இருக்கிறார்.ராமர் கோயில் கட்டுவது குறித்த விவகாரம் சுப்ரீம் கோர்ட்டில் இருக்கிறது, நீதிமன்றம்தான் முடிவு செய்ய வேண்டும் என்று பா.ஜ.க. கபட நாடகம் போடுகிறது. ராமர் கோயில் கட்டுவதற்கும், பொது சிவில் சட்டம் கொண்டு வருவதற்கும் ஏன் அவசரச்சட்டத்தை பா.ஜ.க அரசால் பிறப்பிக்க முடியவில்லை. இவ்வாறு சிவசேனா கட்சி தெரிவித்துள்ளது.

PETTA Audio Launch Updates | Rajinikanth, Vijay Sethupathi, Simran, Trisha

Ragi paal | kelvaragu milk | BABY FOOD for 4 Months old | குழந்தைகளுக்கு கேழ்வரகு / ராகி பவுடர்

Learn colors with 10 Color Play doh and Bumblebee | Learn numbers with Clay and balloons and #TMNT

குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து