மூக்கையூர் மீன்பிடித்துறைமுக பணிகள் விரைவில் முடிவடையும் - கலெக்;டர் வீரராகவராவ் தகவல்

செவ்வாய்க்கிழமை, 9 அக்டோபர் 2018      ராமநாதபுரம்
9 rmd news

ராமநாதபுரம்,- மூக்கையூர் மீன்பிடி துறைமுக பணிகள் அடுத்த ஆண்டு இறுதிக்குள் முடிவடையும் என்று கலெக்டர் வீரராகவராவ் தெரிவித்தார்.
 ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி அருகேயுள்ள மூக்கையூர் கிராமத்தில், ஆழ்கடல் மீன்பிடிப்பினை ஊக்குவித்திடும் வகையில் ரூ.113.90 கோடி மதிப்பில் திட்டமிடப்பட்டு முன்னேற்றத்தில் உள்ள மீன்பிடித் துறைமுக கட்டுமானப் பணிகளின் நிலை குறித்து மாவட்ட கலெக்டர் கொ.வீர ராகவ ராவ் செய்தியாளர்களுடன் சுற்றுப்பயணம்  மேற்கொண்டு ஆய்வு செய்தார். அப்போதுஅவர் கூறியதாவது:- ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மீனவர்களின் நலனைப் பாதுகாத்திடும் வகையில் மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்து பல்வேறு வளர்ச்சிப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.  அந்தவகையில் ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி அருகேயுள்ள மூக்கையூர் கிராமப்பகுதியில் ரூ.113.90 கோடி மதிப்பில் 250 விசைப்படகுகள் மற்றும் 200 நாட்டுப்படகுகள் நிறுத்திட ஏதுவாக புதிய மீன்பிடித் துறைமுகம் அமைப்பதற்கான பணிகள் முன்னேற்றத்தில் உள்ளன.  இத்துறைமுகத்தில்  மீனவர்கள் பயன்பெறும் வகையில் மீன்ஏலக் கூடம், மீன்களை காயவைப்பதற்கான தளம், வலை பின்னும் கூடம், மீனவர்கள் ஓய்வறை உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன்  அமைக்கப்பட்டு வருகிறது.   இப்பணிகள் நிலை குறித்து இன்றைய தினம் கள ஆய்வு செய்யப்பட்டது.  அதனடிப்படையில் தற்போது வரை 84சதவீதம் கட்டுமான பணிகள்  நிறைவு பெற்றுள்ளது. மார்ச் 2019க்குள் இக்கட்டுமானப் பணிகள் அனைத்தும் நூறு சதவீதம் நிறைவேற்றப்படும். இவ்வாறு தெரிவித்தார்.
 இந்த செய்தியாளர் சுற்றுப்பயணத்தின் போது மீன்வளத்துறை கூடுதல் இயக்குநர் ஜானி டாம் வர்கீஸ், மீன்வளத்துறை செயற்பொறியாளர் பி.முத்துக்குமார், உதவி செயற்பொறியாளர் ஜி.நாகரத்தினம், மீன்வளத்துறை துணை இயக்குநர் காத்தவராயன், உதவி இயக்குநர் சிவக்குமார், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் கோ.அண்ணாதுரை உள்பட அரசு அலுவலர்கள், மீனவர் சங்க பிரதிநிதிகள் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து