முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வெங்கையா நாயுடு திண்டுக்கல் வருகை காந்திகிராம கிராமிய பல்கலைக்கழக வளாகத்தில் 2,000 போலீசார் குவிப்பு

செவ்வாய்க்கிழமை, 9 அக்டோபர் 2018      திண்டுக்கல்
Image Unavailable

திண்டுக்கல், - இந்திய துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு திண்டுக்கல் வருகை முன்னிட்டு காந்திகிராம கிராமிய பல்கலைக்கழகத்தில் 2 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
திண்டுக்கல் அருகிலுள்ள காந்திகிராம கிராமிய பல்கலைக்கழகத்தில் இன்று பட்டமளிப்பு விழா நடைபெறுகிறது. இதற்காக கோவையில் இருந்து தனி விமானம் மூலம் வெங்கையா நாயுடு  அம்பாத்துரையில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேட் தளத்தில் வந்து இறங்குகிறார். பின்னர் அங்கிருந்து கார் மூலம் பல்கலைக்கழகத்திற்கு வருகிறார். பேராசிரியர்களுடன் கலந்துரையாடலுக்கு பின்னர் மதியம் 3.30 மணிக்கு பல்நோக்கு அரங்கில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்கிறார். அங்கு 1500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களையும், பல்கலைக்கழக அளவில் ரேங்க் பெற்றவர்களுக்கு தங்கப்பதக்கத்தையும், பல்வேறுதுறைகளில் சாதனை படைத்த 2 பேருக்கு கௌரவ டாக்டர் பட்டங்களையும் வழங்கி சிறப்புரையாற்றுகிறார்.
வெங்கையா நாயுடு வருகையை முன்னிட்டு ஹெலிபேட் தளம் முதல் பல்கலைக்கழகம் வரை 2 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். பல்கலைக்கழகத்திற்குள் அடையாள அட்டை வைத்துள்ள மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். வெளி நபர்கள் யாரும் அனுமதிக்கப்பட வில்லை. இதேபோல் துணை ஜனாதிபதி வந்து செல்லும் பாதை முழுவதும் தொடர்ந்து கண்காணிப்பில் போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து