முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

19 முறை சூதாட்டம்: திருந்தாத 3 ஹாங்காங் கிரிக்கெட் வீரர்கள்: தடை விதித்து ஐசிசி அதிரடி

செவ்வாய்க்கிழமை, 9 அக்டோபர் 2018      விளையாட்டு
Image Unavailable

ஹாங்காங்கின் இர்பான் அகமட், நதீம் அகமட், ஹசீப் அம்ஜத் ஆகியோர் ஐசிசி ஆட்ட நிர்ணய சூதாட்ட தடுப்பு விதிகளை 19 முறை மீறி சூதாட்டத்தில் ஈடுபட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில் இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளனர்.

3 வீரர்களும் 2015 உலகக்கோப்பை தகுதிச்சுற்று போட்டிகளில் சூதாட்டப்புகாரில் சிக்கியுள்ளனர். சகோதரர்களான இர்பான் மற்றும் நதீம் 2016 டி20 உலகக்கோப்பையிலும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட போட்டிகளில் சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதுதவிர இர்பான் மீது 2014 உலக டி20 தொடர் ஜிம்பாப்வேவுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் சூதாட்டத்தில் ஈடுபட்ட புகாரும் கூடுதலாக உள்ளது. அதேபோல் உலக டி20 தகுதிச் சுற்றுப் போட்டிகளில் 2015-லும் ஒரு போட்டி அல்லது அதற்கு மேற்பட்ட போட்டிகளில் சூதாட்டம் ஆடிய குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இர்பான் 9 முறை தவறிழைத்துள்ளார், சகோதரர் நதீம் 5 முறை தவறிழைத்துள்ளார்.

2014-ல் ஆடப்பட்ட உலகக்கோப்பைத் தகுதி சுற்றில் கனடாவை ஹாங்காங் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது, இதற்கு முன்பாக ஸ்காட்லாந்துடன் ஆடியது, இந்த 2 போட்டிகளிலும் இவர்கள் மூவரும் பேசிவைத்து மோசமாக ஆடியதாக புகார் எழுந்து நிரூபணம் ஆகியுள்ளது.  அக்டோபர் 8ம் தேதி முதல் 3 வீரர்களுக்கும் இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க 14 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளன.

28 வயதான இர்பான் தொடக்க வீரரும் வேகப்பந்து வீச்சாளருமாவார். இவர் முன்னதாக ஐசிசி சூதாட்ட விதிமுறைகளை மீறியதற்காக இரண்டரை ஆண்டுகள் தடை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. அப்போது இவர் தவறிழைக்கவில்லை, ஆனால் சூதாட்டக்காரர்கள் தன்னை அணுகியதை இவர் முழு விவரத்துடன் ஐசிசிக்கு தெரியப்படுத்தவில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து