முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இளைஞர் ஒலிம்பிக் போட்டி: பளுதூக்குதலில் இந்திய வீரர் ஜெரேமிக்கு தங்க பதக்கம்

செவ்வாய்க்கிழமை, 9 அக்டோபர் 2018      விளையாட்டு
Image Unavailable

பியூனோஸ் ஏர்ஸ் : இளைஞர் ஒலிம்பிக் போட்டியின் பளுதூக்குதலில் இந்திய வீரர் தங்க பதக்கம் வென்றுள்ளார்.

3-வது இளையோர் (யூத்) ஒலிம்பிக் போட்டி அர்ஜென்டினா தலைநகர் பியூனஸ் அயர்சில் நடந்து வருகிறது. 206 நாடுகள் பங்கேற்றுள்ள இந்த போட்டியில் இந்தியா சார்பில் 47 வீரர்-வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர். 18-ந் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் நேற்று நடந்த பளுதூக்குதலில் இந்தியாவின் ஜெரேமி லால்ரினங்கா கலந்து கொண்டார். அவர் மொத்தம் 274 கிலோ (124 மற்றும் 150) எடையை தூக்கி முதல் இடம் பிடித்து தங்கம் வென்றுள்ளார்.

ஜோஸ் 3வது இடம்

இந்த போட்டியில் துருக்கி நாட்டின் டாப்டாஸ் கேனர் 263 கிலோ (122 மற்றும் 141) எடையை தூக்கி வெள்ளி பதக்கம் வென்றார்.  இதேவேளையில், கொலம்பியா நாட்டின் வில்லார் எஸ்டீவன் ஜோஸ் 3வது இடம் பிடித்து வெண்கலம் வென்றுள்ளார். மிசோராமின் எய்சவால் நகரை சேர்ந்த லால்ரினங்கா உலக இளைஞர் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்றவர்.

2 பதக்கங்கள்

இந்த வருடம் தொடக்கத்தில் நடந்த ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிகளில் கலந்து கொண்டு ஒரு வெள்ளி (இளைஞர்) மற்றும் ஒரு வெண்கலம் (இளையோர்) என 2 பதக்கங்களை வென்றுள்ளார்.  இதில் இரண்டு தேசிய சாதனைகளையும் அவர் படைத்துள்ளார்.

ஜூடோ போட்டி

நடந்த பெண்களுக்கான ஜூடோ போட்டியின் 44 கிலோ உடல் எடைப்பிரிவில் இறுதிபோட்டியில் இந்திய வீராங்கனை தங்ஜம் தபாபி தேவி 0-11 என்ற புள்ளி கணக்கில் வெனிசுலா வீராங்கனை மரியா கிமின்சிடம் தோல்வி கண்டார். இதனால் தங்ஜம் தபாபி தேவி வெள்ளிப்பதக்கத்துடன் திருப்திபட வேண்டியதானது.

வெள்ளிப்பதக்கம்

வெள்ளிப்பதக்கம் வென்ற தங்ஜம் தபாபி தேவி மணிப்பூரை சேர்ந்தவர். ஒலிம்பிக் போட்டியில் ஜூடோ பந்தயத்தில் இந்தியர் ஒருவர் பதக்கம் வெல்வது இதுவே முதல்முறையாகும். முன்னதாக நடந்த துப்பாக்கி சுடுதலில் ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பந்தயத்தில் இந்திய வீரர் துஷர் மானே 247.5 புள்ளிகள் குவித்து வெள்ளிப்பதக்கம் வென்றார். ரஷிய வீரர் கிரிகோரி ஷமாகோவ் 249.2 புள்ளிகளுடன் தங்கப்பதக்கமும், செர்பியா வீரர் அலெக்சா மிட்ரோவிச் 227.7 புள்ளிகளுடன் வெண்கலப்பதக்கமும் பெற்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து