முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அதிநவீன ஆளில்லா விமானங்களை பாகிஸ்தானுக்கு விற்கிறது சீனா

புதன்கிழமை, 10 அக்டோபர் 2018      உலகம்
Image Unavailable

Source: pti

பெய்ஜிங் : ஆயுதங்களுடன் சென்று தாக்குதல் நடத்தும் 48 அதிநவீன ஆளில்லா விமானங்களை பாகிஸ்தானுக்கு சீனா விற்பனை செய்யவுள்ளது.

பாகிஸ்தான் - சீனா இடையே நடைபெற்றுள்ள மிகப்பெரிய ஆயுத தளவாட பரிவர்த்தனைகளில் இதுவும் ஒன்றாகும். இதன் மொத்த மதிப்பு எவ்வளவு என்பது குறித்து அறிவிக்கப்படவில்லை.

விங் லூங்-2 எனப்படும் இந்த ஆளில்லா விமானங்கள், கண்காணிப்பு, தாக்குதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளும். அமெரிக்காவின் எம்.க்யு. 9 ரீப்பர் ஆளில்லா விமானத்துக்கு இணையான விமானமாக இது கருதப்படுகிறது.

இந்த ரக ஆளில்லா விமானங்களை பாகிஸ்தானும், சீனாவும் கூட்டாக தயாரிக்கும் என்றும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ரஷியாவிடம் இருந்து எஸ்.400 டிரையம்ப் ரக அதிநவீன இடை மறி ஏவுகணைகளை வாங்குவது தொடர்பாக இந்தியா அண்மையில் ஒப்பந்தம் செய்தது. இந்நிலையில், பாகிஸ்தானுக்கு அதிநவீன ஆளில்லா விமானங்களை விற்பது தொடர்பான அறிவிப்பை சீனா வெளியிட்டுள்ளது.

பாகிஸ்தானும், சீனாவும் மிகவும் நெருங்கிய நட்பு நாடாக திகழ்கின்றன. அந்த இரு நாடுகளும் சேர்ந்து ஜெ.எப். தண்டர் எனும் பெயரில் போர் விமானத்தை தயாரிக்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து