இலங்கையில் ஐயப்ப பக்தர்கள் ஆர்ப்பாட்டம்

புதன்கிழமை, 10 அக்டோபர் 2018      உலகம்
pilgrims struggle 2018 10 10

கொழும்பு : சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்வதற்கு அனுமதி வழங்கி சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த உத்தரவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து இலங்கையில் தமிழர் வாழும் பகுதிகளில் ஐயப்ப பக்தர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், இலங்கைத் தமிழர்கள் வாழும் ஆஸ்திரேலியா நாட்டின் மெல்பேர்ன் நகரிலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களும் செல்ல அனுமதி அளித்து சுப்ரீம் கோர்ட் கடந்த மாதம் 28- ம் தேதி தீர்ப்பளித்தது. இதற்கு நாடு முழுவதும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன. மேலும், இந்த உத்தரவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து கேரளம், தமிழ்நாடு, கர்நாடகம், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் பல இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

இந்நிலையில், இந்தியாவின்அண்டை நாடான இலங்கையில் தமிழர் வாழும் பகுதிகளிலும், இலங்கைத் தமிழர்கள் வாழும் ஆஸ்ரேலியாவின் மெல்போர்ன் நகரிலும் ஐயப்ப பக்தர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கொழும்பு கோட்டை ரயில் நிலையம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு அகில இலங்கை சபரிமலை குருசாமிகள் ஒன்றியம் ஏற்பாடு செய்திருந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான பெண்கள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட ஐயப்ப பக்தர்கள் கலந்து கொண்டு கோஷம் எழுப்பினர். அப்போது ஐயப்பனை புகழ்ந்து பக்தி, பஜனை பாடல்கள் பாடப்பட்டன. மேலும், இலங்கையில் தமிழர்கள் வாழும் மட்டக்களப்பு, ஹட்டன் ஆகிய பகுதிகளிலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. மேலும், ஆஸ்திரேலியா மெல்பேர்ன் நகரிலும் இலங்கைத் தமிழர்கள் போராட்டம் நடத்தினர்.

உடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI

இழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI

FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது எப்படி | How to file FIR | Indian Law | Thinaboomi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து