முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரபேல் போர் விமான ஒப்பந்த விவகாரம்: மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு

புதன்கிழமை, 10 அக்டோபர் 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : ரபேல் போர் விமான ஒப்பந்தம் குறித்த விவரங்களை வரும் 29-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

முத்திரையிடப்பட்ட...

ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பான விவரங்கள் நாட்டின் பாதுகாப்பு சம்பந்தப்பட்டவை என்பதால் அதனை வெளியிட முடியாது என சுப்ரீம் கோர்ட்டில்  மத்திய அரசு தெரிவித்தது. இதையடுத்து முடிவெடுக்கப்பட்ட விவரத்தை மட்டும் மூடிய முத்திரையிடப்பட்ட உறையில் வைத்து தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

குற்றச்சாட்டு...

பிரான்சின் டிசால்ட் நிறுவனத்திடம் இருந்து 36 ரபேல் போர் விமானங்களை மத்திய அரசு கொள்முதல் செய்ய ஒப்பந்தம் செய்துள்ளது. ஆனால், முந்தைய காங்கிரஸ் அரசு நிர்ணயித்த விலையைக் காட்டிலும் பல மடங்கு விலையை அதிகமாக பா.ஜ.க. அரசு வழங்க உள்ளது என்றும், மத்திய அரசின் ஹெச்.ஏ.எல். நிறுவனத்துக்கு வழங்க இருந்த ஒப்பந்தத்தை ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு மத்திய அரசு அளித்தது. இதில் ஊழல் நடந்துள்ளதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.

பொதுநல மனுக்கள்

ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக விசாரணை கோரி சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. வழக்கறிஞர்கள் சர்மா, வினீத் தண்டா மற்றும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தெஹ்சீன் பூனாவாலா உள்ளிட்டோர் இந்த மனுக்களை தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் எஸ்.கே.கவுல், கே.எம். ஜோசப் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

தெரிவிக்க வேண்டாம்

அப்போது மத்திய அரசின் சார்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல், ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பான தகவல்கள் நாட்டின் பாதுகாப்பு சம்பந்தப்பட்டது, அதனை வெளியே சொல்ல முடியாது. மேலும் வெளிநாடுகளுடனான உறவும் பாதிக்கப்படும். சிலர் அரசியல் ஆதாயம் பெறவே இதுபோன்ற மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன என்றார். பின்னர் நீதிபதிகள், ரபேல் போர் விமானத்தின் விலை, ஒப்பந்த விவரம், நிர்ணயிக்கப்பட்ட விலை போன்றவற்றை தெரிவிக்க வேண்டாம். அதே சமயம் முடிவெடுக்கப்பட்ட விவரத்தை சீல் வைக்கப்பட்ட கவரில் நீதிமன்றத்தில் மத்திய அரசு வரும் 29-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர். பின்னர் வழக்கு விசாரணையை வரும் 31-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து