முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உ.பி.யில் ரயில் பெட்டிகள் தடம் புரண்டு விபத்து: 9 பேர் பலி - உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ.5 லட்சம்: பிரதமர் இரங்கல்

புதன்கிழமை, 10 அக்டோபர் 2018      இந்தியா
Image Unavailable

லக்னோ : உ.பி. ரயில் விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணத் தொகையை மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் அறிவித்தார்.

உத்தரப் பிரதேச மாநிலத்தின் ரேபரேலி மாவட்டத்தில் அமைந்துள்ள ஹர்சந்த்பூர் ரயில் நிலையத்தில் இருந்து 50 மீட்டர் தூரத்தில் நியூ பர்கா எக்ஸ்பிரஸ் ரயிலின் 9 பெட்டிகள் தடம் புரண்டு நேற்று விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 7 பேர் உயிரிழந்தனர். 21 பேர் படுகாயம் அடைந்தனர்.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உடனடியாக நேரில் சென்று மீட்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தினார். மேலும் சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் லக்னோ மற்றும் வாரணசியில் இருந்து வந்த தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் மீட்பு நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் மற்றும் படுகாயமடைந்தவர்களுக்கு ரூ. 50 ஆயிரம் நிவாரணம் வழங்கி உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்திரவிட்டார்.

இந்நிலையில், ரயில் விபத்து தொடர்பாக உரிய விசாரணை நடைபெறும் எனவும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 5 லட்சம் மற்றும் படுகாயமடைந்தவர்களுக்கு ரூ. ஒரு லட்சம் நிவாரணத் தொகை அறிவித்து மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் உத்தரவிட்டார்.

உ.பி. ரயில் விபத்து மிகுந்த மனவேதனையை ஏற்படுத்தியுள்ளதாகவும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலும், படுகாயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து