முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரோட்டோர கடையில் டீ குடிக்கும் ராகுல் - வைரலாகும் கலக்கல் வீடியோ

புதன்கிழமை, 10 அக்டோபர் 2018      இந்தியா
Image Unavailable

ராஜஸ்தான் : காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ரோட்டோர கடை ஒன்றில் டீ குடிக்கும் வீடியோதான் தற்போது வைரலாகி வருகிறது.

ராஜஸ்தானில் இந்திய காங்கிரஸ் இளைஞர் அணி தலைவர்கள் சந்திப்பில் கலந்து கொள்ள ராகுல் சென்றிருந்தார். அப்போது திடீரென அங்கிருந்த ஒரு டீக்கடைக்குள் நுழைந்து விட்டார். அந்த கடையில் ஏற்கனவே சிலர் உட்கார்ந்து டீ, பிஸ்கட் சாப்பிட்டு கொண்டிருந்தனர். கடைக்கு சென்ற ராகுல் ஒரு கப் டீ வேண்டும் என்றார்.

ராகுல் காந்தி தனது கடைக்குள் வந்து விட்டதை பார்த்ததும் கடைக்காரருக்கு குஷி தாங்கவில்லை. ஆனாலும் அதை வெளியில் காட்டிக் கொள்ளாமல் ஒரு டீ போட்டு ராகுலிடம் கொடுத்தார். அதை வாங்கி அருந்திய ராகுல் கடைக்குள் இருந்த பொதுமக்களிடம் இயல்பாக பேச தொடங்கினார். டீ கடையில் ராகுல் அமர்ந்து அனைவருடனும் டீ குடிக்கும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து