இந்தோனேஷியாவில் மீண்டும் நிலநடுக்கம் - 6.0 ரிக்டராக பதிவு

வியாழக்கிழமை, 11 அக்டோபர் 2018      உலகம்
eathquake 2018 10 10

ஜகர்த்தா : இந்தோனேஷியாவின் தீவுகளில் ஒன்றான சுலாவெசியில் கடந்த மாதம் 28 -ம் தேதி சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. சுமார் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டு, ரிக்டர் அளவுகோலில் 7.5 அலகுகளாகப் பதிவான இந்த நிலநடுக்கம் காரணமாக, அந்தப் பகுதியைச் சேர்ந்த ஏராளமான வீடுகள் இடிந்து விழுந்தன. 170 முறை ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட சுனாமியில் சுலாவெசி மாகாணத் தலைநகரான பாலூ, டோங்கலா மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளும் மிகக் கடுமையான பாதிக்கப்பட்டன. இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்தையும் தாண்டி உள்ளது. மேலும், பல கோடி மதிப்பிலான சேதம் ஏற்பட்டது. பலாரோவா மற்றும் பெடோபோ கிராமங்களைச் சேர்ந்த 5,000 பேரைக் காணவில்லை என்று அந்த கிராமங்களின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிலநடுக்கத்தால் ஏராளமான உடல்கள் இன்னும் மீட்கப்படாமல் உள்ள நிலையில், அங்கு மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

ஜவா மற்றும் பாலி தீவுகளில் நேற்று ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.0 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. எனினும் சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை. இதனால் மக்கள் பலரும் தங்களது வீடுகளை விட்டு வெளியே ஓடி வந்து தெருக்களில் தஞ்சம் அடைந்தனர். நிலநடுக்கம் காரணமாக பொது மக்களுக்கோ அல்லது கட்டடங்களுக்கோ எந்தவித சேதமும் ஏற்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

SANDA KOLI 2 public review opinion | சண்டக்கோழி 2 திரைப்படம் ரசிகர்கள் கருத்து

VadaChennai Review | VadaChennai Movie Review | Dhanush | Vetrimaaran | Santhosh Narayanan

Vada Chennai public review opinion | வடசென்னை திரைப்படம் ரசிகர்கள் கருத்து

SANKAGIRI KOTTAI | Sankagiri Hill Fort travel | சங்ககிரி மலை கோட்டை பயணம்

குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi

Rajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

Kili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2

Chippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2

Chippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து