முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொருளாதாரத் தடை: இந்தியா குறித்து விரைவில் முடிவு அறிவிக்கப்படும் - அதிபர் டிரம்ப் சொல்கிறார்

வியாழக்கிழமை, 11 அக்டோபர் 2018      உலகம்
Image Unavailable

வாஷிங்டன் : ரஷ்யாவிடம் எஸ் - 400 ஏவுகணையை வாங்கும் முடிவில் இந்தியா மீது பொருளாதாரத் தடை விதிக்கப்படுமா என்ற கேள்விக்கு விரைவில் முடிவு அறிவிக்கப்படும் என்று அதிபர் டிரம்ப் பதிலளித்திருக்கிறார்.

ரஷ்யாவுடன் எஸ்-400 ஏவுகணைகளை வாங்கும் திட்டத்தை இந்தியா கைவிடவில்லை என்றால், ரஷ்யாவிடம் ராணுவ தளவாடங்களை வாங்கும் நாடுகள் தடை செய்யப்பட்ட பட்டியலின் கீழ் இந்தியா சேர்க்கப்பட்டு தடை விதிக்கப்படும் என அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்தார். மேலும் ரஷ்யாவிடம் இருந்து ஆயுதங்களை வாங்கும் நாடுகள் மீது பொருளாதார தடை விதிக்க வகை செய்யும் சட்ட மசோதாவும் அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

இந்த நிலையில் அமெரிக்காவின் மிரட்டலை பொருட்படுத்தமால் ரஷ்யாவுடன் ஒப்பந்தத்தை இந்தியா இறுதி செய்தது. இதனைத் தொடர்ந்து இந்திய - அமெரிக்க உறவில் விரிசல் ஏற்படும் சூழல் உருவானது. மேலும் அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியா மீது பொருளாதாரத் தடைகளை விதிக்க தயாராகி வருவதாக செய்திகள் வெளியாகின.

இந்த நிலையில் வெள்ளை மாளிகையில் ஓவல் அலுவலகத்தில் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் இந்தியா குறித்து டிரம்ப்பிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த போது டிரம்ப் கூறியதாவது,

இந்தியா குறித்து முடிவு விரைவில் அறிவிக்கப்படும். நீங்கள் நினைப்பதற்கு முன்னதாகவே இந்தியா குறித்த முடிவை அறிவிப்பேன் என்று கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து