முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மத்திய இணையமைச்சர் மீது 10 பெண் பத்திரிகையாளர்கள் பாலியல் புகார்

வியாழக்கிழமை, 11 அக்டோபர் 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : மேற்கு வங்கத்தை சேர்ந்த மத்திய இணை அமைச்சர் எம்.ஜே அக்பர் மீது 10 பெண் ஊடகவியலாளர்கள் பாலியல் புகார் அளித்துள்ளனர். இதனால் பா.ஜ.க.வுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் தற்போது மீடூ  என்ற ஹேஷ்டேக் மூலம் பெண்களுக்கு எதிரான கொடுமைகளை தெரிவித்து வருவது வைரல் ஆகியுள்ளது. வரிசையாக பெண்கள் பலர், பிரபலங்கள் குறித்து பாலியல் புகார்களை குவித்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது மூத்த பத்திரிக்கையாளரும், மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சருமான எம்.ஜே. அக்பர் பாலியல் புகாரில் சிக்கி உள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிரபல பத்திரிகையாளர் பிரியா ரமணி, பா.ஜ.க. எம்.பி. எம்.ஜே அக்பர் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறியுள்ளார். ஓட்டல் அறை ஒன்றில் குளிர்பானம் கொடுத்து தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும்,  பலமுறை இப்படி அவர் தொந்தரவு கொடுத்ததாகவும் பி.ஜே. அக்பர் மீது பிரியா ரமணி குற்றச்சாட்டு கூறியுள்ளார்.

இவரை தொடர்ந்து மேலும் 9 பெண்கள் எம்.ஜே அக்பர் மீது பாலியல் குற்றச்சாட்டு மீ டு டேக் மூலம் புகார் தெரிவித்துள்ளனர். பாலியல் குற்றச்சாட்டு வைத்திருக்கும் 10 பேருமே ஊடகவியலாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதில் பல பேருக்கு வேலை தருவதாக கூறி, நேர்முக தேர்விற்கு அழைத்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளாராம் எம்.ஜே. அக்பர். ஓட்டலுக்கு இண்டர்வியூவிற்கு வர வேண்டும் என்று கூறி அழைத்து, பின் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார் என்று அவர் மீது குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து