டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு பெரும் சரிவு

வியாழக்கிழமை, 11 அக்டோபர் 2018      வர்த்தகம்
rupee 2018 9 5

புது டெல்லி : அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத சரிவை சந்தித்துள்ளது.

இந்தியா ரூபாயின் மதிப்பு தினந்தோறும்  சரிவை சந்தித்து கொண்டே வருகிறது. தொடர்ந்து இந்த சரிவு நீடிக்கும் என்று தகவல்கள் வருகிறது. இந்த நிலையில் நேற்று அமெரிக்க டாலருக்கு நிகரான இந்தியா ரூபாய் மதிப்பு 74-ஐ தாண்டியது. இந்தியா ரூபாய் மதிப்பு 74.47ஐ தொட்டுள்ளது. இது தொடர்ந்து சரியும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த சரிவால் இந்திய பொருளாதார நிலை மோசமாக பாதிக்கும். பெட்ரோல், டீசல் விலை இன்னும் அதிகமாகும். அது மட்டுமில்லாமல் சில பொருட்களின் விலையும் கூட அதிகம் ஆகும். இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலை உச்சத்தை அடையும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து