ரபேல் விமான ஒப்பந்தத்தை ரிலையன்சிற்கு அளிக்க பா.ஜ.க. அரசு கட்டாயப்படுத்தியது - ஆதாரங்களை வெளியிட்டது பிரான்ஸ் பத்திரிகை

வியாழக்கிழமை, 11 அக்டோபர் 2018      இந்தியா
Rafael fighter aircraft dea 2018 10 10

புது டெல்லி : ரபேல் ஒப்பந்தத்தை ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு அளிக்க மத்திய பா.ஜ.க. அரசு கட்டாயப்படுத்தியது என்று பிரான்ஸ் பத்திரிக்கை பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளது.

ரபேல் போர் விமான ஒப்பந்தம் மூலம் ரூ. 12 ஆயிரம் கோடி இழப்பும், பல ஆயிரம் கோடி முறைகேடும் நடந்துள்ளதாக காங்கிரஸ் குற்றம் சாட்டி வருகிறது. மேலும் இதில் ரிலையன்ஸ் குழும தலைவர் அனில் அம்பானி பெயரும் சிக்கியுள்ளது. பிரான்ஸ் நாட்டில் இருந்து பா.ஜ.க அரசு வாங்கிய ரபேல் ரக விமான ஒப்பந்தத்தில் ஊழல் நடந்து இருப்பதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது.

ரபேல் விமானத்தை இந்தியாவிற்கு அளிக்கும் டிசால்ட் நிறுவனம் இதில் மத்திய அரசு மூலம் பல வகைகளில் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது என்று பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி மீடியாபார்ட் என்ற பிரான்ஸ் பத்திரிக்கை இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

ரபேல் ஒப்பந்தத்தை ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு அளிக்க மத்திய பா.ஜ.க. அரசு கட்டாயப்படுத்தியது. ரிலையன்ஸ் நிறுவனம் இருந்தால் மட்டுமே ஒப்பந்தம் செய்யப்படும். இல்லையென்றால் ஒப்பந்தம் நடக்காது என்று விதிமுறைகளை மாற்றியதாக ஆதாரங்களை வெளியிட்டுள்ளது. இதற்கான ஒப்பந்த ஆதாரங்களை அந்த பத்திரிக்கை வெளியிட்டுள்ளது. டிசால்ட் நிறுவனம் இந்துஸ்தான் நிறுவனத்துடன்தான் ஒப்பந்தம் செய்ய இருந்தது. ஆனால் பிரதமர் மோடி, அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு ஒப்பந்தத்தை அளிக்க சொன்னது தற்போது அம்பலம் ஆகியுள்ளது.

Tata Harrier 2019 SUV Full Review | In Depth Review - Pros & Cons | Thinaboomi

FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது எப்படி | How to file FIR | Indian Law | Thinaboomi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து