நீர்நிலை ஆக்கிரமிப்பு விவகாரம்: 5 மாவட்ட கலெக்டர்கள் ஐகோர்ட் கிளையில் ஆஜர்

வியாழக்கிழமை, 11 அக்டோபர் 2018      தமிழகம்
madurai highcourt 2018 10 11

மதுரை : நீர் நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பான வழக்கில் 5 மாவட்ட கலெக்டர்கள் மதுரை ஐகோர்ட் கிளையில் நேற்று ஆஜராகினர். மேலும் மதுரை மாநகராட்சி கமிஷனர், மாவட்ட எஸ்.பி. ஆகியோரும் நேரில் ஆஜராகினர்.

மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய 5 மாவட்டங்களில், நீர் நிலைகளில் ஆக்கிரமிப்பு அதிகரித்துள்ளது. இதை அகற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறி, மதுரையை சேர்ந்த, அருள்நிதி, முத்துக்குமார், ரமேஷ் ஆகிய வழக்கறிஞர்கள் மதுரை ஐகோர்ட் கிளையில் வழக்கு தொடர்ந்தனர். நீதிபதி ராஜா அமர்வு முன்பாக இந்த வழக்கு கடந்த வாரம் விசாரணைக்கு வந்த போது, இந்த பகுதிகள் முல்லை பெரியாறு பாசன பகுதியாக இருந்தும் கூட, நல்ல மழை காலத்திலும் கன்மாய்கள் நிரம்பவில்லை என்பது நீதிபதி சுட்டிக் காட்டினார்.

கன்மாய் உள்ளிட்ட நீர் நிலைகளை பாதுகாக்க என்ன நடவடிக்கை எடுக்கலாம். இதுதொடர்பாக குழு அமைக்கலாமா என்பது குறித்தெல்லாம் ஆலோசனை தெரிவிக்க மேற்கண்ட மாவட்ட கலெக்டர்கள் வரும் 11-ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி அப்போது உத்தரவிட்டிருந்தார். அதை தொடர்ந்து நேற்று 5 மாவட்ட கலெக்டர்களும் நீதிமன்றத்தில் ஆஜராகினர். மேலும் மதுரை மாநகர ஆணையர் அனீஷ் சேகர், மதுரை மாவட்ட எஸ்.பி. மணிவண்ணன் உள்ளிட்டோர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகினர்.

Tata Harrier 2019 SUV Full Review | In Depth Review - Pros & Cons | Thinaboomi

FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது எப்படி | How to file FIR | Indian Law | Thinaboomi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து