அமெரிக்காவை புரட்டி போட்ட மைக்கேல் புயல் இதுவரை 13 பேர் பலி

வியாழக்கிழமை, 11 அக்டோபர் 2018      உலகம்
Hurricane Michael storm 2018 10 11

வாஷிங்டன் : அமெரிக்காவில் சக்தி வாய்ந்த மைக்கேல் புயல் புளோரிடா மாகாணத்தை தாக்கியதில் இதுவரை 13 பேர் பலியாகியுள்ளனர்.
இது குறித்து புளோரிடா அதிகாரிகள் தரப்பில் கூறப்படுவதாவது,

புளோரிடாவில் நேற்று முன்தினம் 125 கிலோமீட்டர் வேகத்தில் மைக்கேல் புயல் அம்மாகாணத்தின் வடமேற்கு பகுதிகளை தாக்கியது. இதன் காரணமாக பல இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. இதில் ஒருவர் பலியானார். இந்த புயல் காரணமாக மின்சார கம்பிகள் பல இடங்களில் அறுத்து விழுந்ததால் 5 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் மின்சாரம் இல்லாத சுழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

மைக்கேல் புயல் சக்தி வாய்ந்த புயலாக இருப்பதால் அது புளோரிடாவைத் தொடர்ந்து ஜார்ஜியா, அலபாமா ஆகிய மாகாணங்களை நோக்கி நகர்ந்து அங்கும் பலத்த சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. மீட்புப் பணிகள் விரைந்து நடந்து வருகிறது என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். மத்திய அமெரிக்காவில் மட்டும் மைக்கேல் புயலுக்கு இதுவரை 13 பேர் பலியானதாகவும், சுமார் 3 லட்சத்துக்கு அதிகமானவர்கள் புளோரிடாவிலிருந்து வேறு இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI

இழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI

FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது எப்படி | How to file FIR | Indian Law | Thinaboomi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து