தீபாவளி பண்டிகைக்கு 20,567 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் - அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தகவல்

வியாழக்கிழமை, 11 அக்டோபர் 2018      தமிழகம்
deepavali special buses 2018 10 11

சென்னை : தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து 20,567 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

30 முன்பதிவு மையங்கள்

போக்குவரத்து துறை அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் கூறியதாவது., தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து 20,567 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். சென்னையில் கோயம்பேடு, மாதவரம் உட்பட 30 முன்பதிவு மையங்கள் செயல்படும். சென்னையில் கோயம்பேடு, தாம்பரம், மாதவரம், பூந்தமல்லி ஆகிய இடங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்படும். நவம்பர் 1-ம் தேதி முதல் தீபாவளி சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவு தொடங்கும். தென் மாவட்டஙகளுக்கு கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும். புதுச்சேரி மார்க்கமாக செல்லும் பேருந்துகள் சைதாப்பேட்டை பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும்.

26 சிறப்பு முன்பதிவு...

மாதவரம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து ஆந்திரா வழியாக செல்லும் பேருந்துகள் இயக்கப்படும். பொதுமக்கள் வேண்டுகோளை ஏற்று கே.கே.நகர் மாநகர பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் இயக்கப்படும். கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 26 சிறப்பு முன்பதிவு கவுண்டர்கள் செயல்படும். சென்னையில் இருந்து நவம்பர் 3,4,5 தேதிகளில் சுமார் 11,367 பேருந்துகள் இயக்கப்படும். மற்ற இடங்களில் இருந்து சென்னைக்கு 9,200 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும். தமிழகத்தில் ஆம்னி பேருந்துகளின் கட்டணத்தை அரசு கட்டுப்படுத்தி வருகிறது. அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகளின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

சுலபமாக மஞ்சள் பயிரிட்டு சந்தைபடுத்தும் முறைகள் | How to grow Turmeric in farm easy ways

Easy DIY Arts and Crafts | How to make Coffee cup base for kids with 13 Ice Cream Sticks | GArts - 1

Sarkar Review | Vijay | AR Murugadoss | Keerthy Suresh | A R Rahman | Sarkar Movie Review

Easy 30 minutes Milk kova recipe in Tamil | Milk kova seivathu eppadi | Paalkova recipe in Tamil

Manpaanai Meen Kulambu recipe in Tamil | Traditional Fish Curry | Gramathu Meen Kolambu

குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi

Rajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

Kili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2

Chippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2

Chippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து