அ.தி.மு.க.வில் சசிகலா உறுப்பினராக இல்லை - அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

வியாழக்கிழமை, 11 அக்டோபர் 2018      தமிழகம்
jayakumar 15-09-2018

சென்னை : அ.தி.மு.க. பலாப்பழம் போன்றும், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் எட்டிக்காய் போன்றது என்றும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். மேலும் அ.தி.மு.க.வில் சசிகலா உறுப்பினராக இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

சென்னை பல்கலைக்கழக வளாகத்தில்  நிருபர்களுக்கு பேட்டி அளித்த  அமைச்சர் ஜெயகுமார் கூறியதாவது:-

கட்சி சட்டவிதிகளின்படி, வேறொரு கட்சியில் இருப்பவர், அ.தி.மு.க.வில் தொடர முடியாது என்பதன் அடிப்படையிலேயே சசிகலா நீக்கப்பட்டுள்ளார். அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின்  பொதுச்செயலாளராக சசிகலா இருப்பதால், அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர் தகுதியை அவர் இழந்துவிட்டதாகவும், அவர் அ.தி.மு.க.வில் இல்லை என்றும் அவர் தெரிவித்தார். மேலும், அ.தி.மு.க. விதி, சசிகலா குடும்பத்தினர் அனைவருக்கும் பொருந்தும். அ.தி.மு.க. பலாப்பழம் என்றும், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் எட்டிக்காய்   என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து