கோவில் திருவிழாவில் வடமாடு எருதுகட்டு

வியாழக்கிழமை, 11 அக்டோபர் 2018      ராமநாதபுரம்
11 kamuthi news

 கமுதி, - கமுதி அருகே புரட்டாசி பொங்கல் விழாவை முன்னிட்டு, வடமாடு எருதுகட்டு போட்டி புதன்கிழமை நடைபெற்றது.
கமுதி அருகே தோப்படைபட்டி முத்தாலம்மன் கோயில் புரட்டாசி மாத பொங்கல் விழா கடந்த அக். 3 ல், காப்பு கட்டுதலுடன் துவங்கியது. இத்திருவிழாவை முன்னிட்டு முக்கிய நிகழ்ச்சியாக புதன்கிழமை வடமாடு எருது கட்டு போட்டி நடைபெற்றது. இப்போட்டியில்  மதுரை, சிவகங்கை, தேனி, விருதுநகர் மாவட்டங்களை சேர்ந்த 13 காளைகள், 100 க்கும் மேற்பட்ட மாடு பிடி வீரர்கள் பங்கேற்றனர். இப்போட்டியில்  சிறந்த விளையாடி வெற்றி பெற்ற மாடுகளுக்கும், மாடு பிடி வீரர்களுக்கும் அண்டா, சைக்கிள், ரொக்க  பணம் வழங்கபட்டது. போட்டியை காண வந்த பொதுமக்களுக்கு கிராமத்தின் சார்பாக அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும் வியாழக்கிழமை இத்திருவிழாவை முன்னிட்டு பால்குடம், மாவிளக்கு, மஞ்சள் நீராட்டு உள்ளிட்ட  நிகழ்ச்சி நடைபெற உள்ளது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை தோப்படைபட்டி கிராம செய்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து