முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாரம்பரிய உணவுகளின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெறவுள்ளது உணவு பாதுகாப்புத்துறை முதன்மை செயலர் .அமுதா, தகவல்.

வியாழக்கிழமை, 11 அக்டோபர் 2018      மதுரை
Image Unavailable

  மதுரை- மதுரை மாவட்டத்தில் உணவு பாதுகாப்புத்துறையின் மூலம் பாரம்பரிய உணவுகளின் முக்கியத்துவம் குறித்த விழ்ப்புணர்வு பேரணி நடைபெறவுள்ளதை தொடர்ந்து  உணவு பாதுகாப்புத்துறை முதன்மை செயலர்  ஆணையர் திருமதி.பெ.அமுதா,   மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர்.ச.நடராசன்  தலைமையில் களஆய்வு செய்த பின் தெரிவித்ததாவது:
 நாடு முழுவதும் அண்ணல் மகாத்மா காந்தி அவர்களின் 150-வது ஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. உணவு பாதுகாப்புத்துறையின் சார்பில் பாரம்பரிய உணவுகளின் மகத்துவத்தினை மக்களிடையே கொண்டு சேர்க்கும்; வண்ணமாக விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் சைக்கிள் பேரணி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. வருகின்ற 27.10.2018 அன்று வண்டியூர் பூங்காவில் நடைபயணம் மேற்கொள்பவர்களுக்கு விழிப்புணர்வு எழுத்துக்கள் பொறித்த கைசட்டைகள் மற்றும் துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட உள்ளது.
மேலும் அதனை தொடர்ந்து காந்தி அருங்காட்சியகத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடைபெற இருக்கிறது. மேலும் காந்தி அருங்காட்சிய வளாகத்தில் பாரம்பரிய உணவுகளுக்கான அரங்குகள் அமைக்கப்பட்டு மக்கள் அறியும் வண்ணம் காட்சிப்படுத்தப்படவுள்ளது. எனவே பொதுமக்கள் அனைவரும் இவ்விழிப்புணர்வு பேரணியில் கலந்துகொண்டு பாரம்பரிய உணவுகளின் முக்கியத்துவத்தினை அறிந்து தங்களது குழந்தைகளுக்கும் எடுத்து கூறவேண்டும். பாரம்பரிய உணவுகளின் முக்கியத்துவத்தினை அறிந்துகொள்ளும் வகையில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவர்களிடையே பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, வினாடி-வினா, கலை நிகழ்ச்சிகள் நடைபெற இருக்கிறது என தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மதுரை மாநகராட்சி ஆணையர் மரு.அணீஸ்சேகர், , மாவட்ட வருவாய் அலுவலர்  .ரெ.குணாளன் அவர்கள், உதவி ஆட்சியர் (பயிற்சி)  .கே.எம்.பிரவீன்குமார்,   , மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர்  .சோமசுந்தரம்  , மதுரை வடக்கு வட்டாட்சியர்  .சிவகுமார்   உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து