முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரெங்கநாதபுரம் கிராமத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள்: தேனி கலெக்டர் ஆய்வு

வியாழக்கிழமை, 11 அக்டோபர் 2018      தேனி
Image Unavailable

      தேனி,- தேனி மாவட்டம், ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட இராஜகோபாலன்பட்டி ஊராட்சிக்குட்பட்ட டி.வி.ரெங்கநாதபுரம் கிராமத்தில் வீடு வீடாக சென்று டெங்கு கொசு ஒழிப்பு பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர்   ம.பல்லவி பல்தேவ்,  பார்வையிட்டு திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
    இராஜகோபாலன்பட்டி ஊராட்சிக்குட்பட்ட டி.வி.ரெங்கநாதபுரம் கிராமத்தில், ஆதிதிராவிடர் காலனியில் வீடு வீடாக சென்று குடியிருப்புகளில் தண்ணீர் சேமித்து வைக்கப்பட்டுள்ள பாத்திரங்கள், ஆட்டுக்கல், குளிர் சாதனப்பெட்டிகள், குடியிருப்புகளில் கழிப்பறை வசதிகள், கழிவு நீர் வாய்க்கால் செல்லும் பகுதிகளில் டெங்கு கொசு புழுக்கள் உற்பத்தி உள்ளனவா என்றும், அவ்வாறு இருக்குமிடங்களில் தண்ணீரை அப்புறப்படுத்தும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டபின் தெரிவித்ததாவது,
     ஆதிதிராவிடர் காலனியில் பாரத பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 25 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு, வீடுகள் கட்டி வழங்கப்;படவுள்ளது. மேல்நிலை குடிநீர் தொட்டியினை உடனடியாக பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளவும், கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் தெரு குழாய்களில் தினந்தோறும் சீராக குடிநீர் வழங்கிடவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், ஆதிதிராவிடர் காலனியில் ரூ.6 இலட்சம் மதிப்பீட்டில் தார் சாலை அமைத்திடவும் நடவடிக்கைகள்  மேற்கொள்ளப்படவுள்ளது.
    கால்நடை வளர்ப்பவர்கள் வீடுகளில் உள்ள கழிவு நீரை கழிவு நீர் வாய்க்காலில் விடாமல் உறிஞ்சு குழிகள் அமைத்திட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தொடர்ச்சியான அடிப்படையில் ஒவ்வொரு கிராமத்திற்கும் சென்று அடிப்படை வசதிகளை கண்டறிந்து மேம்படுத்திட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனத்தெரிவித்தார்.
     இந்த ஆய்வின் போது, ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் பா.திலகவதி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) கே.ஜெயலட்சுமி, வட்டாட்சியர் பி.அர்ஜுனன், வட்டார வளர்ச்சி அலுவலர்  முத்துப்பாண்டி உட்பட சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து