நீதிபதிகள் இனி வார நாட்களில் விடுப்பு எடுக்கக் கூடாது: தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் உத்தரவு

வெள்ளிக்கிழமை, 12 அக்டோபர் 2018      இந்தியா
Supreme Court 27-09-2018

புதுடெல்லி, நீதிபதிகள் இனி வார நாட்களில் விடுப்பு எடுக்கக் கூடாது என்று நீதிபதிகளுக்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

நீதிமன்ற வேலை நாட்களில் நீதிபதிகள் விடுமுறை எடுப்பதற்கு, சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தடை விதித்துள்ளார். சுப்ரீம் கோர்ட் மற்றும் விசாரணை நீதிமன்றங்களில் சுமார் 3 கோடி வழக்குகள் நிலுவையில் உள்ளன. நிலுவை வழக்குகள் அதிகரிப்பதை தடுப்பது குறித்து, சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் ஐகோர்ட் தலைமை நீதிபதிகள் மற்றும் கொலிஜியம் உறுப்பினர்களுடன் காணொலி மூலம் ஆலோசனை நடத்தி இந்த முடிவை எடுத்துள்ளனர்.

நீதிமன்ற வேலை நாட்களில் அவசர காரணங்களை தவிர, வேறு காரணங்களுக்காக நீதிபதிகளுக்கு விடுமுறை தர வேண்டாமென சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதில் சுப்ரீம் கோர்ட், ஐகோர்ட் மற்றும் விசாரணை நீதிமன்றங்களில் சுமார் 3 கோடி வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவ்வாறு நிலுவையில் உள்ள வழக்குகள் அதிகரிப்பதை தடுப்பது குறித்து, சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் ஐகோர்ட்தலைமை நீதிபதிகள் மற்றும் கொலிஜியம் உறுப்பினர்களுடன் காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார்.

அப்போது இனி நீதிபதிகள் வார நாட்களில் விடுப்பு எடுக்கக் கூடாது எனவும் வேலை நாட்களில் கருத்தரங்கம், அரசு விழா போன்றவற்றில் அவர்கள் பங்கேற்க வேண்டாம் எனவும் முடிவெடுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தலைமை நீதிபதி விடுமுறை பயண சலுகைகளையும் நீதிபதிகளுக்கு அனுமதிக்க வேண்டாம் என்றும் தலைமை நீதிபதி கோகாய் அறிவுறுத்தினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து