முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினரின் தீவிர முயற்சியால் 10 வருட சாலை பிரச்சனைக்கு தீர்வு தமிழக அரசுக்கு கிராம மக்கள் நெஞ்சார்ந்த நன்றி

வெள்ளிக்கிழமை, 12 அக்டோபர் 2018      திண்டுக்கல்
Image Unavailable

திண்டுக்கல்-வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினரின் தீவிர முயற்சியால் 10 வருட சாலை பிரச்சனைக்கு தீர்வு கண்டதால் 
தமிழக அரசுக்கு கிராம மக்கள் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டுள்ளர்.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் சட்டமன்ற தொகுதி குஜிலியம்பாறை ஊராட்சி ஒன்றியம் சின்னுலுப்பை ஊராட்சியில் செக்குருட்டிபட்டி கிராமம் உள்ளது, இங்கு சுமார் 600க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இக்கிராமத்திற்கு குஜிலியம்பாறை ஊராட்சி ஒன்றியம் சின்னுலுப்பை ஊராட்சியில் செக்குருட்டிபட்டி கிராமம் உள்ளது, இங்கு சுமார் 600க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இக்கிராமத்திற்கு செல்வதற்கு சாலை வசதி இல்லாததால் பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகி வந்தனர். மழைக் காலங்களில் இக்கிராமத்திற்கு செல்ல வேண்டுமென்றால் மிகவும் கடினமாக இருந்தது. மாணவ - மாணவிகள் பள்ளிக்கு செல்வதற்கு சிரமத்திற்கு உள்ளாகி வந்தனர். அவசர தேவைக்கு ஆம்புலன்ஸ் கூட இக்கிராமத்திற்கு வருவதற்கு வழியின்றி இருந்தது. இக்கிராமத்திற்கு செல்லும் வழியில் ரெயில்வே பாலம் ஒன்று உள்ளது. எனவே இங்கு சாலை அமைக்கும் பணிக்கு ரெயில்வே துறையிடம் ஒப்புதல் பெற வேண்டும். அது பெற முடியாமல் இருந்ததால் சாலை அமைக்கும் பணி முடியாமல் போய் வந்தது. இதுகுறித்து அக்கிராம மக்கள் வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வெ.ப.பா.பரமசிவத்திடம் முறையிட்டனர். உடனே சட்டமன்ற உறுப்பினர் அக்கிராமத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தார்.
இதுகுறித்து வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன், மக்களவை துணை சபாநாயகர் மு.தம்பித்துரை ஆகியோரது கவனத்திற்கு கொண்டு சென்றார். மேலும் சேலம் ரெயில்வே டிவிஷனல் மேலாளர் மற்றும் ரெயில்வே பொது மேலாளரிடமும் முறையிட்டார்.
இதன் பலனாக ரெயில்வே டிராக் அருகில் செக்குருட்டிபட்டி கிராமத்திற்கு சாலை அமைப்பதற்கான நிலத்தை தமிழக அரசு ரூ.3.50 லட்சம் நிதியுதவியை பெற்று அதற்கான நிலத்தை வாங்கி உள்ளாட்சித்துறை வசம் கையகப்படுத்தப்பட்டது. இதனை அடுத்து இப்பகுதிக்கு ரூ.11 லட்சம் மதிப்பீட்டில் பூமிபூஜையை மக்களவை துணை சபாநாயகர் மு.தம்பித்துரை, வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வெ.ப.பா.பரமசிவம், மாவட்ட கலெக்டர் வினய் ஆகியோர் துவக்கி வைத்தனர். நிகழ்ச்சியில் ஒன்றிய கழக செயலாளர் மலர்வண்ணன் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர். இச்சாலை அமைக்கும் பணி மாவட்ட கலெக்டரின் சிறப்பு பரிந்துரையின் பேரில் 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட உள்ளது.
கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு மேலாக சாலையே இல்லாத பகுதிக்கு அம்மாவின் வழியில் ஆட்சி புரிந்து வரும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரது நல்லாட்சியினால் புதிய தார்ச்சாலை அமைக்கப்பட உள்ளதால் இக்கிராம மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் அவர்கள் தெரிவிக்கையில் எங்கள் கிராமத்திற்கு சாலையே அமையாது என்ற நிலையை மாற்றிய தமிழக அரசுக்கும், வனத்துறை அமைச்சருக்கும், மக்களவை துணை சபாநாயகருக்கும் எங்களது நெஞ்சார்ந்த நன்றி. மேலும் இதுகுறித்து வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வெ.ப.பா.பரமசிவத்திடம் கோரிக்கையாக வைத்தபோது அவரும் கனிவுடன் பரிசீலித்து எங்கள் கிராமத்திற்கு நேரில் வந்து ஆய்வு நடத்தி உறுதியாக சாலை அமைக்கப்படும் என்றார். அதை மெய்ப்பிக்கும் வகையில் சாலைப்பணி தொடங்கி உள்ளது. அதற்காக வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினருக்கு நாங்கள் என்றென்றும் கடமைப்பட்டுள்ளோம் என்று மனம் நெகிழ்ந்து கூறினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து