முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நோயாளிகளின் வசதிக்காக ரூ.10 லட்சம் மதிப்பிலான புதிய பேட்டரி கார் சேவை: விருதுநகர் கலெக்டர் சிவஞானம் கொடியசைத்து துவக்கி வைத்தார்

வெள்ளிக்கிழமை, 12 அக்டோபர் 2018      விருதுநகர்
Image Unavailable

   விருதுநகர்,- விருதுநகர் அரசு தலைமை மருத்துவமனையில் நோயாளிகள், முதியவர்கள் மற்றும் பொதுமக்களின் வசதிக்காக ரூ.9 இலட்சத்து 99 ஆயிரத்து 712 மதிப்பில் இரண்டு பேட்டரி கார்கள் சேவையை மாவட்ட ஆட்சித்தலைவர்  .அ.சிவஞானம், கொடியசைத்து துவக்கி வைத்து தெரிவித்தாவது:-
விருதுநகர் இராமமூர்;த்தி சாலையில் விருததுகர் அரசு தலைமை மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. விருதுநகர் மாவட்டத்திலிருந்து இந்த மருத்துவமனைக்கு நாள்தோறும் சுமார் 1000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வருகை புரிந்து சிகிச்சை பெற்று பயன்பெற்று வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்தில் மொத்தம் 11 அரசு மருத்துவமனைகளும், 52 ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் 6 நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களும் செயல்பட்டு பொதுமக்களுக்கு மருத்துவ சேவையை வழங்கி வருகின்றன. விருதுநகர்  அரசு மருத்துவமனையில் நடக்க முடியாத நோயாளிகள், முதியவர்கள் மற்றும் பொதுமக்களின் வசதிக்காக பேட்டரி கார்(மின்மாற்றி வாகனம்) இயக்கப்படுகிறது. விருதுநகர் அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் உள்ள  மகப்பேறு பிரிவில் தொடங்கி ஸ்கேன் மையம், சீட்டு பதியும் இடம், வெளிநோயாளிகள் பிரிவு, எக்ஸ்ரே மற்றும் சி.டி ஸ்கேன் மையம், ஆய்வகம், இரத்தவங்கி, அவசர சிகிச்சைபிரிவு ஆகிய இடங்களுக்கு நோயாளிகள், முதியவர்கள் மற்றும் பொதுமக்களின் தேவைக்கேற்ப தினசரி இயக்கப்படும்.
விருதுநகர் மாவட்டத்தில் முதன் முறையாக அரசு தலைமை மருத்துவமனையில்  ) ரூட்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட இரண்டு பேட்டரி கார்கள் பொதுமக்கள் சேவைக்காக தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு பேட்டரி காரில் 6 நபர்கள் அமர்ந்து செல்லக்கூடிய வகையிலும், சுமார் 200 கிலோ அளவிலான பொருட்களை ஏற்றிச் செல்லும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இன்னொரு பேட்டரி கார் 4 நபர்கள் அமர்ந்து செல்லக்கூடிய வகையிலும்;,  நோயாளிகளை படுக்க வைத்து கொண்டு செல்வதற்கு வசதியாக தூக்குபடுக்கை  வசதியுடனும் வடிவமைக்கப்பட்டுள்ளது.  இந்த பேட்டரி கார்களை ஒருமுறை 4-5 மணிநேரம் பேட்டரி ஜார்ஜ் செய்தால் சுமார் 70 கி.மீ வரை இயக்கமுடியும் என மாவட்ட ஆட்சித்தலைவர்  .அ.சிவஞானம்,  தெரிவித்தார்கள்.
இந்நிகழ்ச்சியில் இணை இயக்குநர்(மருத்துவபணிகள்) மரு.மனோகரன், துணை இயக்குநர்(கனிம வளம்)  .ஆறுமுக நயினார், அரசு தலைமை மருத்துமனை கண்காணிப்பாளர் மரு.பிரகலாதன்,  நிலைய மருத்துவ அலுவலர்  மரு.முருகேசன், நேஷனல் ஹெல்த் மிஷன் நோடல் அலுவலர் மரு.சிவக்குமார் உட்பட அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொணடனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து