முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பத்திரிகையாளர் ஜமால் விவகாரம் : சவுதி, துருக்கி இடையே மோதல்

சனிக்கிழமை, 13 அக்டோபர் 2018      உலகம்
Image Unavailable

ரியாத் : பத்திரிகையாளர் ஜமால் கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் விவகாரம் குறித்து சவுதி மற்றும் துருக்கி இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.
பத்திரிக்கையாளர் ஜமால் கொலை செய்யப்பட்டதாக புகார் எழுந்துள்ள நிலையில், இந்த விவகாரத்தால் சவுதி - துருக்கி இடையே மீண்டும் மோதல் வெடித்துள்ளது. துருக்கி திட்டமிட்டு பொய் பிரச்சாரம் செய்து வருவதாக சவுதி அரேபியா குற்றம் சாட்டியுள்ளது.

சவுதி பத்திரிகையாளர் ஜமால் கஷோகிஜி சவுதியால் கொல்லப்பட்டு விட்டார் என்று துருக்கி ஆதாரங்களுடன் தெரிவித்துள்ளது. இது குறித்து துருக்கி அதிகாரிகள் தரப்பில், எங்களுக்குக் கிடைத்த ஆடியோ மற்றும் வீடியோ ஆதாரங்களின் அடிப்படையில் சவுதி பத்திரிகையாளர் ஜமால் கஷோகிஜி அக்டோபர் 2-ம் தேதி கொல்லப்பட்டிருக்கிறார். அவரைக் கொன்று அவரது உடலை சவுதி அதிகாரிகள் அழித்துள்ளனர். எங்களுக்குக் கிடைத்த அந்த வீடியோவில் உள்ள நபர்கள் அரபிக் பேசுவதை நீங்கள் கேட்கலாம். அவர்கள் ஜமாலைத் தாக்குகின்றனர். அவர்கள் அவரைக் கொடுமை செய்து கொலை செய்கின்றனர். இதில் நீங்கள் ஜமாலின் குரலைக் கேட்கலாம் என்று கூறியுள்ளனர்.

ஆனால் இந்த புகாரை சவுதி அரேபியா திட்டவட்டமாக மறுத்து வருகிறது. இதுகுறித்து சவுதி அரேபிய உள்துறை அமைச்சர் அப்துல் அஜீஸ் கூறுகையில்,  சவுதி அரேபிய தூதரகத்துக்கு வந்த ஜமால் சிறிது நேரத்தில் திரும்பி விட்டார். அவர் எங்கு சென்றார்? எங்கு இருக்கிறார் என்ற விவரங்களை சொல்ல வேண்டிய பொறுப்பு துருக்கி நாட்டுக்கு உள்ளது. ஆனால் இந்த விவகாரத்தை திசை திருப்பும் வகையில் போலியான வீடியோ காட்சிகளை வெளியிடுவது கண்டிக்கத்தக்கது. இது இருநாடுகள் இடையேயான உறவை சீர்க்குலைக்க வகை செய்யும் எனக் கூறினார். ஆனால் ஜாமல் சவுதி தூதரகத்தில் இருந்து நலமுடன் வெளியேறிய சி.சி.டி.வி .காட்சிகளை வெளியிட தயாரா? என துருக்கி சவால் விடுத்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து