முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி உடல்நலக் குறைவால் காலமானார்

சனிக்கிழமை, 13 அக்டோபர் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை : முன்னாள் அமைச்சரும், சட்டப்பேரவை முன்னாள் துணை சபாநாயகருமான பரிதி இளம்வழுதி உடல்நலக்குறைவால் நேற்று காலமானார். அவருக்கு வயது 58.
தமிழக சட்டப்பேரவை உறுப்பினராக 6 முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர் பரிதி இளம்வழுதி. தி.மு.க.வின் முன்னணி தலைவர்களில் ஒருவராக விளங்கிய அவர் 1991-ம் ஆண்டு அ.தி.மு.க. பெரும் வெற்றி பெற்று ஆட்சியமைத்த போது, தி.மு.க. சார்பில் ஒரே எம்எல்ஏவாக இருந்தார்.

1996 - 2001-ம் ஆண்டு சட்டப்பேரவை துணை சபாநாயகராக பதவி வகித்தார். 2006 - 2011-ம் ஆண்டு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சராக பதவி வகித்தார். தி.மு.க.வில் இருந்து 2013-ம் ஆண்டு விலகிய அவர் அ.தி.மு.க.வில் இணைந்தார். ஸ்டாலினுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவர் கட்சியை விட்டு வெளியேறியதாக கூறப்பட்டது. இந்தநிலையில், அடையாரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை உயிரிழந்தார். பரிதி இளம்வழுதி உடலுக்கு தலைவர்கள் பலரும் அஞ்சலி செலுத்தினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து