முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கவுகாத்தியில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் 4 பெண்கள் படுகாயம்

சனிக்கிழமை, 13 அக்டோபர் 2018      இந்தியா
Image Unavailable

கவுகாத்தி : அசாம் மாநிலம், கவுகாத்தி நகரில் உள்ள சுக்லஸ்வர் காட் பகுதியில் நேற்று திடீரென வெடிகுண்டு வெடித்தது. இதில் 4 பெண்கள் காயமடைந்தனர்.

துர்கா பூஜைக்காக மக்கள் பூஜைப் பொருட்கள் வாங்கப் பரபரப்பாக ஓடிக் கொண்டிருந்த நேரத்தில் இந்த குண்டுவெடிப்பு நடந்துள்ளது. இதற்கு ஐக்கிய இடதுசாரி முன்னணி அசாம் சுயேட்சை (உல்பா-1) அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. ஆனால், இது தீவிரவாதச் செயல் அல்ல என்று போலீசார் மறுத்துள்ளனர்.

அசாம் மாநில பா.ஜ.க. முதல்வராக சர்பானந்தா சோனாவால் உள்ளார். இந்நிலையில், கவுகாத்தி நகரில் உள்ள பான் பசார் பகுதி மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியாகும். நவராத்திரி பண்டிக்கைக்காக மக்கள் பொருட்கள் வாங்குவதற்காக மிகுந்த பரபரப்பாக சென்று கொண்டிருந்தனர். அப்போது நேற்று காலை 11.45 மணிக்கு மக்கள் நடக்கும் நடைபாதை அருகே திடீரென மிகப்பெரிய வெடிக்கும் சத்தம் கேட்டது.

இதைக் கேட்டு மக்கள் நாலாபுறமும் சிதறி ஓடினார்கள். அதன்பின் அங்கு போலீஸார் விரைந்தனர். இந்த குண்டுவெடிப்பில் காயமடைந்த 4 பெண்களையும் போலீசார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வெடிகுண்டு செயல் இழக்க வைக்கும் பிரிவினர், மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டு வெடிகுண்டுகள் ஏதும் இருக்கிறதா என ஆய்வு செய்தனர். அந்தப் பகுதி முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து போலீஸார் துணை ஆணையர் ரஞ்சன் புயான் கூறுகையில், இந்த குண்டுவெடிப்புக்கு உல்பா தீவிரவாத இயக்கத்தினர் பொறுப்பேற்றுள்ளதாகக் கூறுகிறார்கள். ஆனால், எங்களைப் பொருத்தவரை யாரும் இதற்குக் காரணமல்ல. ஏனென்றால், வெடிகுண்டு வெடித்ததற்கான எந்தத் தடயம் இல்லை. ஏதோ மர்மபொருள் வெடித்து கற்கள் மட்டுமே 4 பெண்கள் மீதும் விழுந்துள்ளது.

ஆதலால், இதற்கு நாசவேலைக்கான முயற்சி, தீவிரவாதச் செயல் என்று கருத முடியாது. சாலை ஓரம் மணல், செங்கல், கற்கள் குவித்துள்ளனர். அதில் இருந்த ஏதாவது மர்மபொருள் வெடித்திருக்கலாம் என நினைக்கிறோம். வெடிகுண்டு செயல்இழக்கும் படையினர் ஆய்வு செய்து வருகின்றனர். அவர்களின் முடிவை வைத்து அடுத்த கட்ட விசாரணை நகரும்.

காயமடைந்த 4 பெண்களும் கவுகாத்தி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து