முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

SJ சூர்யாவை நடிப்பில் , “ மான்ஸ்டர் ” திரைப்படத்தை தயாரிக்கிறது

சனிக்கிழமை, 13 அக்டோபர் 2018      சினிமா
Image Unavailable

Source: provided

SJ சூர்யாவை நடிப்பில் , “ மான்ஸ்டர் ” திரைப்படத்தை தயாரிக்கிறது
மாயா , மாநகரம் போன்ற தரமான வெற்றி படங்களை தயாரித்த பொடென்ஷியல் ஸ்டுடியோஸ் SJ சூர்யாவை நடிப்பில் , நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் “ மான்ஸ்டர் ” திரைப்படத்தை தயாரிக்கிறது.

இது பொடென்ஷியல் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் மூன்றாவது திரைப்படம். SJ சூர்யா கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் ப்ரியா பவனி ஷங்கர் கதாநாயகியாக நடிக்கிறார். “ ஒரு நாள் கூத்து “ திரைப்படத்தை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் இப்படத்தை இயக்கியுள்ளார்.

மான்ஸ்டர் குழந்தைகளுக்கான திரைப்படம் இதில் SJ சூர்யா இதுவரை நடித்திராத புதுமையான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.படத்துக்கு இசை ஜஸ்டின் பிரபாகரன் , ஒளிப்பதிவு கோகுல் பினாய் , படத்தொகுப்பு சாபு ஜோசப் , கலை ஷங்கர் சிவா. படத்தின் போஸ்ட் புரொடெக்ஷன் வேலைகள் வேகமாக நடைபெற்று வருகிறது. இசை வெளியீடு மற்றும் பட ரிலீஸ் தேதி பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து