முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மது வகைகளை ஹோம் டெலிவரி செய்ய மகராஷ்டிரா புதிய திட்டம்

ஞாயிற்றுக்கிழமை, 14 அக்டோபர் 2018      இந்தியா
Image Unavailable

மும்பை, மது அருந்தி விட்டு வாகனம் இயக்கி விபத்தில் சிக்குவோர்களின் எண்ணிக்கையை குறைக்கும் வகையில், அவர்களின் வீட்டுக்கே சென்று மதுவகைகளை ஹோம் டெலிவரி செய்ய மகராஷ்டிரா அரசு திட்டமிட்டுள்ளது.

மகராஷ்டிரா மாநில அரசின் கலால்வரித்துறை அமைச்சர் சந்திரசேகர் பவான்குலே ஆங்கில நாளேடு ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

மதுவகைகள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைக்கு நாங்கள் கொண்டு வரும் திட்டம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமையும். மக்களின் வீட்டுக்கே மதுவகைகளை டெலிவரி செய்யும் திட்டம் நாட்டிலேயே மகராஷ்டிரா அரசுதான் கொண்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமே விபத்துக்களைக் குறைப்பதுதான். இரு சக்கர, நான்கு சக்கர வாகனம் இயக்குபவர்கள் மது அருந்தி விட்டு வாகனம் இயக்குவதால் விபத்தில் சிக்குகிறார்கள். மது வகைகள் வீட்டுக்கே வந்தால், குடித்து விட்டு வாகனம் இயக்குவது குறையும். இதன்மூலம் விபத்துக்களைக் குறைக்கலாம்.

ஆன்-லைனில் காய்கறிகள், மளிகை பொருட்களை ஆர்டர் செய்வது போல், மதுவகைகளையும் ஆர்டர் செய்து மக்கள் பெற முடியும். ஆனால், மதுவகைகளை ஆர்டர் செய்யும் மக்களுக்குக் கண்டிப்பாக ஆதார் கார்டு இருக்க வேண்டும். மதுபாட்டில் அனைத்திலும் ஜியோ டாக் பொருத்தப்பட்டு இருக்கும். பாட்டில்களை வாங்குவோர் யார், விற்போர் யார் எனத் தொடர்ந்து கண்காணிக்க முடியும். இதன் மூலம் சட்டவிரோதமாக மதுவகைகளை விற்பனை செய்வதையும் தடுக்க முடியும் எனத் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து